சி.வி.குமார் தயாரிப்பில் ‛பீட்சா-3 தி மம்மி’!

Published On:

| By Balaji

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2012 அக்டோபர் 19 அன்று வெளிவந்த பீட்சா திரைப்படம் குறைந்த பொருட்செலவில் மிக திகிலான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது. அதோடு விஜய்சேதுபதியை வியாபார முக்கியத்துவம் மிக்க கதாநாயகன் அந்தஸ்து கிடைக்கிற அளவுக்கு வெற்றியும் பெற்றது.

தொடர்ந்து, அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா இரண்டாம் பாகம் திரைப்படமும் வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது பீட்சா படத்தின் மூன்றாவது பாகமும் வெளிவர உள்ளது.

‛பீட்சா-3 தி மம்மி’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் அஸ்வின், நடிகை பவித்ரா மாரிமுத்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் கவுரவ் நாராயணன், அபிஷேக், காளி வெங்கட், அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியிடப்பட்டது. இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கத்தில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் அருண்ராஜ் இசையமைத்திருக்கும் பீட்சா-3 தி மம்மி படத்தை சி.வி.குமார் தயாரித்திருக்கிறார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share