இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் அடுத்ததாக ஐந்து திரைப்படங்களைத் தயாரிக்கவிருப்பதாக நேற்று (டிசம்பர் 17) நடந்த அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டது.
லிட்டில் ரெட் கார்ட் மற்றும் கோல்டன் ராஷியோ ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்தப் படங்களை நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இயக்குநர்கள் லெனின் பாரதி மற்றும் மாரி செல்வராஜ் இதில் இரண்டு திரைப்படங்களை இயக்கவுள்ளனர். இவர்களுடன் இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய சுரேஷ் மாரி, ஃப்ராங்க்ளின் ஜேக்கப், அகிரன் மோசஸ் ஆகியோர் மற்ற திரைப்படங்களை இயக்கி, இயக்குநர்களாக அறிமுகமாக உள்ளனர்.
We are super excited to associate with @GRfilmssg and @LRCF6204
in bringing out a slate of five films by @leninbharathi1 @mari_selvaraj@frankjacobbbb @AkiranMoses @Sureshmari14 @beemji @officialneelam @RIAZtheboss @pro_guna#NeelamProductions #GoldenRatiofilms #LittleRedCarFilms pic.twitter.com/Ev7lLtUGH4— Neelam Productions (@officialneelam) December 17, 2019
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், முதலில் ஃப்ராங்க்ளின் மற்றும் லெனின் பாரதியின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் ஆரம்பமாக இருப்பதாகவும் அதைத் தொடர்ந்து மற்ற திரைப்படங்களின் இயக்கம் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்தார். செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குத் தற்போது தயாராகும் ஐந்து திரைப்படங்களிலும் சமூகம் சார்ந்த, அரசியல் சார்ந்த கருத்துகள் இருக்கும். மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதாக இந்தத் திரைப்படங்கள் அமையும் என்று தெரிவித்தார். மேலும், படத்தில் அரசியல் கருத்து இடம்பெறும்போது, சென்சார் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் மெட்ராஸ், பரியேறும் பெருமாள், குண்டு போன்ற திரைப்படங்களும் அந்தச் சிக்கலை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்,�,”