>ஆஸ்கர் விருது பட்டியல்

Published On:

| By Balaji

உலக அளவில் சினிமாவை நேசிப்பவர்கள் மற்றும் திரைப்படத்துறையினரால் எதிர்பார்க்கப்படும் விருது அறிவிப்புகளில் ஆஸ்கர் விருதுகள் முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 93வது வருட ஆஸ்கர் விருதுகள் ஏப்ரல் 25 மாலை அறிவிக்கப்பட்டது.

ஆஸ்கரின் 93 வருட வரலாற்றில்

சிறந்த இயக்குநராக சீனாவின் க்ளோயிசாவ் தேர்வாகியுள்ளார்.

பெண் இயக்குநருக்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குநர் விருது ஆஸ்கரில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விருது கிடைத்தது குறித்து கருத்து தெரிவித்த க்ளோயி சாவ், திரையுலகில் நான் சந்தித்து வந்தவை அனைத்தும் நல்லதாகவே இருந்துள்ளது. அந்த நன்மை மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் எவ்வளவு சிக்கலான கட்டத்தில் இருந்தாலும், அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விருது அமையும் என நம்புகிறேன் என கூறினார். சிறந்த இயக்குனர் விருது

பெறும் முதல் சீன பெண் மற்றும் முதல் WomanOfColour என்ற பெருமையை பெற்றிருக்கிறார் க்ளோயிசாவ்.

பல்வேறுபிரிவில்

ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், படங்கள், கலைஞர்கள் விபரம்.

சிறந்த படம் – நோ மேட்லேண்ட்

சிறந்த இயக்குநர் – க்ளோயி சாவ் (நோ மேட்லேண்ட்)

சிறந்த நடிகர் – ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)

சிறந்த நடிகை – ஃபிரான்ட்சிஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லேண்ட்)

சிறந்த துணை நடிகர்: டேனியல் கலூயா(ஜீ டாஸ் அண்ட் தி ப்ளாக் மெஸ்சைய்யா)

சிறந்த துணை நடிகை: யூஜங் யூன்(மினாரி)

சிறந்த சர்வதேச படம்: அனதர் ரவுண்ட்(டென்மார்க்)

சிறந்த தழுவல் திரைக்கதை: தி ஃபாதர்

சிறந்த திரைக்கதை: ப்ராமி சிங் யங் வுமன்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – சோல்(soul)

சிறந்த பாடல்: ஃபைட் ஃபார் யூ

சிறந்த இசை: ஸோல்

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் நீல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த ஒளிப்பதிவாளர் – எரிக் மெசர்ச்மிட் (மேங்க்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: மேங்க்

சிறந்த கிராபிக்ஸ்: டெனட்

சிறந்த ஆவணப்படம் : மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த ஆவண குறும்படம் : கோலெட்

சிறந்த குறும்படம் : டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்

சிறந்த அனிமேஷன் குறும்படம் : இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யு

சிறந்த ஒலி: சவுண்ட் ஆஃமெடல்

சிறந்த ஒப்பனை: மாரெய்னீஸ் ப்ளாக் படம்

சிறந்த ஆடை வடிவமைப்பு: மாரெய்னீஸ் ப்ளாக் பாட்டம்

சர்வதேச அரங்கில் சினிமா தயாரிப்பு, வியாபாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்காவின் ஹாலிவுட் இருந்து வந்த நிலையில் அதில் சீனா ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. ஹாலிவுட் பட தயாரிப்பிற்கான முதலீட்டில் 60% வரை சீனா தரப்பில் இருந்து கிடைத்து வருகிறது ஆஸ்கர் விருது பட்டியலிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

**-ராமானுஜம்**

.

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share