[OPPO F15: இருபதாயிரத்துக்கு நல்ல மாடல்!

entertainment

ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் அதிக மெகா பிக்சல் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை விட அதிக கேமராக்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட்ஃபோன்களே டிரெண்டிங்கில் இருக்கிறது. ஃபோக்கஸ் செய்ய ஒரு கேமரா, எடுக்கும் ஃபோட்டோவுக்கு மேலும் அழகு கூட்டுவதற்கு இன்னொரு கேமரா, போர்ட்ரைட் ஃபோட்டோவுக்கு ஒன்று என தற்போது வெளிவரும் ஸ்மார்ட்ஃபோன்கள் அனைத்துமே குறைந்தபட்சம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டு தான் வெளிவருகின்றன.

ஓப்போ நிறுவனம் F15 என்ற புதிய ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி, இந்த ஸ்மார்ட்ஃபோன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளை சந்திக்கவுள்ளது. அதனுடைய அம்சங்களை மற்றும் தனித்துவங்களை பற்றிப் பார்ப்போம்.

பல வண்ணங்கள் பூசப்பட்டு பளிச்சென்று ஒளிரும் இந்த ஓப்போ F15–ன் டிசைன் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாகவும், மேலும் இதனுடைய ஓரங்களில் கருப்பு நிறம் சேர்ந்து வருவதால், பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலாகவும் இருக்கிறது.

‘C’ டைப் சார்ஜர் பின் கொண்டு 3.5 ஆடியோ ஜாக்குடன் இருக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோனில், சிம் கார்டு போர்ட் எந்த நேரத்திலும் வெளியில் எடுக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கிறது. 6.3 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோன், அதிக தரம் கொண்ட வீடியோக்களை பார்க்க உதவியாகயிருக்கும். இதற்கு முன்பு வெளிவந்த வீவோ மற்றும் ஓப்போ ஸ்மார்ட்ஃபோன்களைப் போலவே, இதிலும் ‘ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 70’ எனப்படும் சிப்செட் பொருத்தப்பட்டு வெளியாகவுள்ளது.

8 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொண்டு ஆன்லைன் கேம் பிரியர்களுக்கு ஏற்ற வகையில் கேம் விளையாடும் போது எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் சில புதிய அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளது. 48 மெகா பிக்ஸல் கொண்டிருக்கும் இதன் கேமரா செட்டப்பில், ஸ்லோ மோஷன், டைம் லாப்ஸ் போன்ற பிரத்யேகமான வீடியோ காட்சிகளையும் பதிவு செய்வதற்கு உதவும். இத்தனை அம்சங்கள் பொருத்தப்பட்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்ஃபோன் இந்திய பண மதிப்பீட்டின் படி ரூபாய் 20 ஆயிரத்திற்கு விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *