oடோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய ஆலோசனை!

entertainment

கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று ஜப்பான் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த (2020) ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32ஆவது ஒலிம்பிக் போட்டிகள் இந்த (2021) ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ஆம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது என தகவல் வெளியானது

ஆனால், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்ய ஜப்பான் அரசு தனிப்பட்ட முறையில் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பல முன்னேறிய நாடுகளை விட ஜப்பான் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ மற்றும் முக்கிய நகரங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் சுமார் 80 சதவிகித மக்கள் இந்தக் கோடையில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுவதை விரும்பவில்லை என்று சமீபத்திய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன, விளையாட்டு வீரர்களின் வருகை வைரஸை மேலும் பரப்பும் என்ற அச்சப்படுகின்றனர் என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால், டோக்கியோ ஒலிம்பிக்கை ரத்து செய்வது குறித்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று ஜப்பானின் துணை தலைமை அமைச்சரவை செயலாளர் மனாபு சாகாய், செய்தித் தொடர்பாளர் நேற்று (ஜனவரி 22) செய்தியாளர்களிடம் கூறினார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் அளித்த பேட்டியில் “இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி ஆரம்பமாகாது என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

**ராஜ்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *