சமந்தா – நாகசைதன்யா ஜோடி விவாகரத்துக்கு பிறகு சமந்தா எந்த செயலில் ஈடுபட்டாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிகொண்டு ஐட்டம் பாடலில் சமந்தா ஆடியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
ஒரே ஒரு பாடலுக்கு ஆடிய அந்த படம் புஷ்பா. 4 மொழிகளில் டிசம்பர் 17 அன்று புஷ்பா வெளியானது. படத்தில் சமந்தா நடனம் ஆடும் ‘ஓ சொல்றியா’ பாடல் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேசப்பட்டது, வைரலானது.
இந்த வெற்றிக்கு சமந்தா நடனம் முக்கிய காரணிகளில் ஒன்று. தற்போது, இந்த பாடலில் ஆடியது குறித்து தன் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட சமந்தா ‘நான் நல்லவளாக நடித்திருக்கிறேன், கெட்டவளாக நடித்திருக்கிறேன், ஜாலியாகவும் நடித்திருக்கிறேன். நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் இருந்திருக்கிறேன். நான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சியிலும் என்னுடைய கடின உழைப்பை போட்டிருக்கிறேன். ஆனால், செக்ஸியாக இருப்பது அடுத்தகட்ட கடினமான உழைப்பு… உங்கள் அன்பிற்கு நன்றி’ என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த பாடலில் நடமாட ஒத்துக்கொண்ட காரணம் குறித்து அவர், ‘இது மிகவும் சவாலாக இருந்தது’ என்று கூறியிருந்தார்.
ஓ சொல்றியா பாடலுக்காக நடிகை சமந்தா ரிகர்சல் செய்த போது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டு, தற்போது அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
**-இராமானுஜம்**
�,”