நடிகர் நிவின் பாலி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “மஹாவீர்யார்” படத்தின் டீசர் 3.04.2022 மாலை ஆறு மணிக்கு வெளியிடப்பட்டது
அப்ரித் ஷைனி இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பாலி ஜே.ஆர்.பிக்சர்ஸ் மற்றும் இந்தியன் மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் நிவின் பாலி, பி.எஸ்.சம்னாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், சுதிர் கரமனா, கிருஷ்ண பிரசாத், பத்மராஜ் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெளியநாட், ஷைலஜா பி அம்பு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இஷான் சாப்ரா இப்படத்திற்கு இசையமைக்க, விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் அப்ரித் ஷைனி, விருது பெற்ற எழுத்தாளர் எம்.முகுந்தனின் கதையைத் தழுவி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்.
மஹாவீர்யார் திரைப்படம் டைம் டிராவல், ஃபேண்டஸி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைச் சுற்றி, உணர்வுபூர்வமான தருணங்களுடன், பொழுதுபோக்கு நிறைந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும், முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இந்தப் படம் இருக்கும் என்கிறார் இயக்குநர்.
**-இராமானுஜம்**