K2022ல் வரும் ‘நினைவோ ஒரு பறவை’!

Published On:

| By Balaji

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் – ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘நினைவோ ஒரு பறவை பாடல்’ இன்றும் எவர்கீரின் பாடலாக உள்ளது.

இந்தப் பாடல் வரிகளை தலைப்பாக கொண்டு ஒரு திரைப்படம் தயாராக உள்ளது. மைண்ட்டிராமா மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரிதுன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் நினைவோ ஒரு பறவை. இதில் நாயகனாக யூடியூப் புகழ் ஹரிபாஸ்கர் கதாநாயகனாகவும், சஞ்சனா சாரதி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து ஏற்கனவே ‛‛மீனா மினிக்கி…., இறகி இறகி…. , கனவுல உசுர…..” ஆகிய பாடல்கள் வெளியாகின. கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருந்தது.

இப்படம் தொடர்பாக படக்குழுவினர் கூறுகையில், ‛‛கொரோனா காலத்தில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தவில்லை. இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணிபுரிந்த சிலரை நாங்கள் இழந்து விட்டோம். அது மிகவும் மன வேதனை அளித்தது. ஒருவழியாக அந்த துக்கங்களில் இருந்து மீண்டு, மீண்டும் தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம். அடுத்தாண்டு திரைக்கு வர உள்ளது” என்றனர்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share