‘ஜேஎஸ்கே பிரைம் மீடியா’ என்ற பெயரில் புதிய இணையவழி செயலியை அறிமுகம் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜேஎஸ்கே சதீஷ்குமார், 2006 முதல் தமிழ் சினிமாவில் இயங்கி வருகிறார். இந்த நிலையில் ஜேஎஸ்கே மீடியா என்ற பெயரில் இணையவழி செயலி ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அந்த செயலி அரசியல், சினிமா, ஆன்மீகம், பெண்கள், மருத்துவம், தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதை, காரட்டூன் என பல அம்சங்களை கொண்டிருக்கும் என அவர் அறிவித்துள்ளார்.
முக்கியமாக திரைப் படங்களை பாரத்து மகிழ இந்த செயலியைப் பயன்படுத்தலாம் என்றும், இந்த செயலியை தரவிறக்கம் செய்த உடனே 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். மேலும் புதிய திரைப்படங்களை இந்த ஜேஎஸ்கே பிரைம் மீடியா தளத்திலேயே வெளியிடுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படங்களை, உயர்ந்த தரத்தில் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பணியாற்றி வருவதாகவும், வருகின்ற ஜூன் மாதத்தில் இந்த செயலியை அமேசான் ஃபயர், கூகுள் பிளே, ஆப்பிள் ஐ ஸ்டார், மற்றும் விண்டோஸ் ஆப் ஸ்டோர்களிலும் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,