நடிகர் விஜய் சேதுபதியின் போட்டோஷூட் தான் சமூக ஊடக உலகில் இன்றைய வைரல் கண்டெண்ட்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன், விஜய் சேதுபதியை வைத்து எடுத்த லாக் டவுன் போட்டோ ஷூட் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ‘Human’ என்று பெயரிடப்பட்ட அந்த போட்டோ ஆல்பம் லாக் டவுனில் வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக இருந்தது. தற்போது எல்.ராமசந்திரன் மீண்டும் விஜய்சேதுபதியை வைத்து அசத்தலான போட்டோஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.
இம்முறை போட்டோ ஆல்பத்துக்கு ‘Man of Fusion’ என்று பெயர் வைத்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த மேக்கப் கலைஞர் மற்றும் காஸ்ட்யூம் டிசைனரான ரோஷ்னா அன் ராய், விஜய் சேதுபதியுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு கொண்டதால், இந்த போட்டோஷுட் நடத்தியதாக ராமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மேன் ஆஃப் ஃபியூஷன் போட்டோஷூட்டில் விஜய் சேதுபதி மூன்று கெட் அப்களில் வெவ்வேறு பாவனைகள் செய்து அசத்தியுள்ளார். ரெட்ரோ கெட் அப்பில் சகலகலா வல்லவன் கமல் ஹாசனை நினைவுப்படுத்துகிறார்.
மற்றொரு கெட்டப்பில் கையில் அந்த காலத்து டெலிபோனை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். மற்றொரு கெட்டப்பில் வயதான தோற்றத்தில் இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் பிஸியாக இருக்கும் சேதுபதி, இந்த மாதிரியான போட்டோ ஷூட்டுக்கும் நேரம் ஒதுக்கி மேற்கொள்வது பாராட்டுக்குரியது.
**- ஆதினி**
�,