ெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 100 கோடி ரூபாய்க்கு மேலான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களின் மூலதனத்தை வசூல், வியாபாரம் மூலம் திரும்பப் பெற படங்களைப் பிற மொழிகளிலும் டப்பிங் செய்து, அதை அகில இந்திய படமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தெலுங்கில் வெளியான ‘பாகுபலி’ படத்துக்கு பிறகுதான் இது சாத்தியமானது.
பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸ் அதன்பின் அகில இந்திய நடிகராக உயர்ந்தார். அதேபோன்று சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தின் வெற்றி மூலம் அல்லு அர்ஜுனும் அகில இந்திய நடிகராக உயர்ந்துள்ளார். அவர்களைப் போல இன்னும் பல தமிழ், தெலுங்கு நடிகர்களுக்கு அகில இந்திய நடிகர்களாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் மூவரும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
தெலுங்கு, தமிழ் தவிர்த்து இந்தி, மலையாளம், கன்னடம், ஆங்கில சப்-டைட்டில் எனப் படம் வெளியிடப்படும்போது, அகில இந்திய அளவில் படங்களை வெளியிடலாம். இதன் மூலம் தங்களுக்கான வியாபார எல்லையை விரிவுபடுத்த முடியும், சம்பளத்தையும் அதிகரிக்க முடியும் என்பது தமிழ் சினிமா கதாநாயகர்களின் எண்ணமாக இருக்கிறது.
இதனிடையே, ‘பான்-வேர்ல்டு’ என்ற புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் ‘அரபிக்குத்து’ வரும் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. அதற்கான அறிவிப்பு வீடியோ ஒன்றில் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். அதில் விஜய்யும் தொலைபேசி வழியாகப் பேசினார். அந்த வீடியோவில் கடைசியாக “இந்தப் பாடல் ‘பான்-வேர்ல்டு’ பாட்டு சார்” என சிவகார்த்திகேயன் கமென்ட் அடித்துள்ளார்.
ஆனால், இந்த அரபிக்குத்து வகை பாடல் 1996ஆம் வருடம் சுந்தர்.சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் சிற்பி இசையமைப்பில் பழனி பாரதி எழுதி இடம்பெற்ற ‘அழகிய லைலா…’ பாடலிலேயே வந்துவிட்டது என சமூக வலைதளங்களில் கிண்டலடித்தும் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
**இராமானுஜம்**
|அரபிக்குத்து பாடலை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel