ஜவான்’ படப்பிடிப்பில் ஷாருக்குடன் கலந்து கொண்ட நயன்தாரா

Published On:

| By admin

‘ஜவான்’ படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கான் உடன் நயன்தாரா கலந்து கொண்டு உள்ளார்.

தமிழில் ‘ராஜா ராணி’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான அட்லி ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என அடுத்தடுத்து கமர்ஷியல் ரீதியான வெற்றி படங்களை கொடுத்தார். இப்பொழுது அவர் பாலிவுட்டில் ஷாருக்கான் படத்தில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்திற்கு ‘ஜவான்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது. இதனை அடுத்து படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு தற்போது முழு வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதையும் படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் இந்த மாதம் 9ம் தேதி நடந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கும் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார்.

இது மட்டுமில்லாமல் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சமூக வலைதளங்களில் லைவிலும்
வந்து நயன்தாரா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதை ஷாருக் உறுதி செய்திருந்தார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்திற்கு பின்பு தாய்லாந்தில் தேனிலவு கொண்டாட்டத்தை முடித்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு வந்த நயன்தாரா இப்பொழுது படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார். இவருக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜூலை 15ஆம் தேதி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது சமூக வலைதள பக்கத்தில் லைவ் வந்த போது ஷாருக்கான் அட்லிக்கும் தனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாகவும் அது நிச்சயம் படத்தில் தெரியும் எனவும் கூறினார். மேலும் இது போன்ற கதையில் தான் முன்னால் நடித்ததில்லை எனவும், தனக்கு கதை புதிதாக இருக்கிறது எனவும் படம் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment