நடிகை நயன்தாரா, அண்ணாத்த படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல், காட் பாதர், இந்தி படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடி என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று வருவதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.
கொரோனா ஊரடங்குக்குப் பின் இயல்புநிலைக்கு நாடு வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அடிக்கடி ஆன்மிகத் தலங்களுக்கு தன் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்ட காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்று வருகிறார்
பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவரான நயன்தாரா சமீபத்தில் திருப்பதி கோயிலுக்குச் சென்று வந்தார். தற்போது மும்பையில் உள்ள மகாலட்சுமி, சித்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். அதைத் தொடர்ந்து, ஷீரடிக்கு சாய் பாபா கோயிலுக்குச் சென்றுள்ளார்.
வயதான காலத்தில் புண்ணியம் தேடி, செய்த தவறுகளுக்கு பரிகாரம் செய்யும் வகையில் ஆலய தரிசனம் செல்வது இந்துக்கள் பழக்கம். திருமணத்துக்கான மாப்பிள்ளையுடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சமீபகாலமாக விக்னேஷ் சிவனுடன் இணைந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப் என பல மாநிலங்களில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வருகிறார் நயன்தாரா.
**-இராமானுஜம்**
�,