]காதலருடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா

entertainment

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானத்தில் சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இன்று கேரளத்தில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி உள்ளனர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அவர்கள் இருவரும் வீட்டிலேயே முடங்கியிருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் இன்று (ஆகஸ்ட் 31) ஓணம் பண்டிகையைக் கொண்டாட நேற்று இரவு தனி விமானம் மூலம் கேரளாவுக்குச் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

கேரளாவில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி விட்டு இருவரும் அடுத்த வாரம் சென்னை திரும்புவார்கள் என்றும், அதன்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

-ராஜ்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *