மீண்டும் ஓடிடி.. நயன்தாரா படத்துக்கு கிடைத்த தீர்வு

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவில் நடிகைகளில் அதிக சம்பளம் பெறுபவர் நயன்தாரா. அதோடு, ஹீரோவுக்கு இணையாக அடுக்கடுக்காகப் படங்களை நடித்து வருகிறார். அப்படி, நயன்தாரா கைவசம் மூன்று படங்கள் தயாராகிவருகிறது. .

ஒன்று, ரஜினியுடன் சிவா இயக்கத்தில் அண்ணாத்த , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சமந்தாவுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் சோலோ லீடாக நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’. இந்த மூன்று படங்களில், ரிலீஸூக்குத் தயாராகியிருக்கும் படம் ‘நெற்றிக்கண்.

நாயகி முக்கியத்துவம் கொண்ட இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்திருக்கிறார். சித்தார்த் நடித்த அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். க்ரைம் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. படத்தில் பார்வை சவால் கொண்ட கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். திரையரங்க ரிலீஸூக்காகத் திட்டமிட்ட இப்படம், ஒடிடியில் வெளியாக டிஜிட்டல் தளங்களுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்துவந்தது.

ஏற்கெனவே, நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி செம ஹிட். பொதுவாக, ஒரு படம் வெளியாகி பெறும் வசூல் சாதனையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தப் படத்தின் வியாபாரம் இருக்கும். அப்படி, ஓடிடியில் வெளியான முந்தைய படத்தின் வெற்றியே, அடுத்தப் படத்தின் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது.

முந்தைய படங்கள் பெற்ற வரவேற்பினால், நெற்றிக்கண் படத்துக்கும் ஓடிடியில் நல்ல வரவேற்பு இருக்கிறதாம். நயனின் முந்தைய படமான மூக்குத்தி அம்மன் படத்தை வாங்கிய டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவமே, நெற்றிக்கண் படத்தையும் வாங்கியிருக்கிறதாம்.

இந்த நெற்றிக்கண் படமானது கொரியன் மொழியில் வெளியான ‘ப்ளைண்ட்’ படத்தின் ரீமேக். அதோடு, இது நயன்தாராவின் 65-வது படம். அதோடு, 1981 ரஜினி நடித்து வெளியான ‘நெற்றிக்கண்’ பட டைட்டிலே, இந்தப் படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது நினைவுக்கூரத்தக்கது.

**- ஆதினி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share