தமிழ் சினிமா நடிகைகளில் நடிகர்களை நம்பி மனதையும், பணத்தையும் அதிகமாக இழந்த நடிகை நயன்தாரா என்பார்கள். அதனால் ஏற்பட்ட ஏமாற்றம், வலிகளைக் கடந்து தன்னை தேடி வரும் நாயகியாகத் தன்னை மறுசீரமைப்பு செய்துகொண்டவர் நடிகை நயன்தாரா.
ஐயா படத்தில் நாயகியாக அறிமுகமான நயன்தாராவின் மேக்கப் மேன் மட்டுமே இன்றுவரை அவருடன் பயணிக்க முடிந்திருக்கிறது. காதலர்களாக அவர் நேசித்த சிலம்பரசன், பிரபு தேவா ஆகிய இருவரையும் தூக்கி எறிந்திருக்கிறார்.
அதன்பின் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட நட்பு இன்றுவரை தொடர்கிறது
இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே அவ்வப்போது வெளியிட்டு விவாதங்களை ஏற்படுத்துவது உண்டு வழக்கம்போல சிலம்பரசன், பிரபு தேவா போன்று விக்னேஷ் சிவன் கழற்றி விடப்படுவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டு வந்தன.
ஆனால் தன்னை ஏமாற்றாமல், தன்னை நேசிக்க கூடியவர்களை எந்த நிலையிலும் நயன்தாரா விலகி போக மாட்டார் என்பார்கள். அது போன்றுதான் சட்டபூர்வமான எந்தத் திருமண ஒப்பந்தங்களும் இல்லாத நிலையில்தான் செய்யும் தொழில் முதலீடுகளில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பெயரையும் இணைக்க தொடங்கியுள்ளார் நயன்தாரா.
பன்னாட்டு, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தினம்தோறும் பணம் புழங்கும் திரையரங்குகள், உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகளில் அதிக அளவில் முதலீடு செய்து வந்தனர்.
அதன் வரிசையில் நவநாகரிகமான தேநீர், காபி ஷாப்களை பெரும் நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் பல கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாகத் தொடங்கி வருகின்றன.
அந்த வரிசையில் ‘சாய் வாலே’ எனும் நிறுவனமும் வேகமாக தனது கிளைகளைத் தொடங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் ஏஞ்சல் இன்வெஸ்ட்டராகப் பண முதலீடு செய்திருக்கிறார் நயன்தாரா. சினிமாவைத் தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பது இதுதான் முதன்முறை.
இது சம்பந்தமாக நயன்தாரா வட்டாரத்தில் விசாரித்தபோது, மனிதர்களை மட்டுமே நேசிப்பவர் நயன்தாரா. பணம், பொருள் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். உண்மைக் காதல், நட்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால், அவரிடம் உண்மையாக இல்லாவிட்டால் அடுத்த நிமிடமே தூக்கி தூரப்போட்டு விடுவார்.
கடந்த பல ஆண்டுகளாகவே விக்னேஷ் சிவனுடன் உறவில் இருக்கும் நயன்தாரா எல்லா முதலீடுகளையும் விக்னேஷ் சிவனின் பெயரில் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
வீடு, கார், நிலம் என அவர் வாங்கும் எதுவாக இருந்தாலும் விக்னேஷ் சிவனின் பெயரிலேயே அதைப் பதிவு செய்கிறார். அந்த வகையில் இந்த முதலீட்டில் தன்னுடன் விக்னேஷ் சிவனையும் இன்வெஸ்ட்டராக இணைத்திருக்கிறார் என்கிறார்கள்.
**-இராமானுஜம்**
�,