Dதபாங் 3-இல் நந்திதா ஸ்வேதா

entertainment

சல்மான்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் தபாங் 3 திரைப்படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா முக்கியப் பங்காற்றியுள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக சல்மான்கான் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா நடித்துள்ளார். இந்தப்படத்தின் வில்லனாக தமிழில் நான் ஈ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த பிரபல கன்னட நடிகர் சுதீப் நடித்துள்ளார். வரும் டிசம்பர் 20-ஆம் தேதி ரிலீசாகவுள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இதில் சோனாக்‌ஷி சின்ஹா கதாபாத்திரத்திற்கு மூன்று மொழிகளிலும் நடிகை நந்திதா ஸ்வேதா டப் செய்துள்ளார். இது குறித்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப்பதிவில், ‘மூன்று மொழிகளிலும் சோனாக்‌ஷி சின்ஹாவிற்காக டப்பிங் செய்தது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது’ என்று குறிப்பிட்டு தனது நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு சல்மான்கான், சோனாக்‌ஷி சின்ஹா நடித்து வெளியான தபாங் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தப்படத்தின் அடுத்த பாகம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. தற்போது ஏழு வருடங்களுக்குப் பின்னர் தபாங் திரைப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகவுள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0