தமிழகத்தில் ஒருவர் கூட பாராட்டவில்லை: நந்தா பெரியசாமி

Published On:

| By Balaji

‘ராஷ்மி ராக்கெட்’ இந்திப்படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆகர்ஷ் குரானா இயக்கியுள்ள இந்தப் படத்தில் டாப்ஸி நாயகியாக நடித்துள்ளார். ஓட்டப்பந்தய வீராங்கனை பற்றிய இந்தப் படத்தின் கதையை தமிழ் சினிமா இயக்குனரான நந்தா பெரியசாமி எழுதியுள்ளார்.

இப்படத்தை இந்தி திரைப்பட விமர்சகர்களும், ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன. ஆனால், இந்தப் படம் குறித்து தமிழ் சினிமாவிலும், தமிழ் ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை என நந்தா பெரிய சாமி வேதனையுடன் தனது முகநூல் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்

ராஷ்மி ராக்கெட் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சிக்காக அந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் என்னை மும்பை அழைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே சினிமாக்காரர்கள் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை.

எந்த ஒரு மீடியாவும் ஒரு பேட்டியும் எடுக்கவில்லை. கதையில் ராஷ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதி நிஜத்தில் படத்தின் கதாசிரியருக்கும் நடந்திருக்கிறது. வாழ்க தமிழ்…வேதனையுடன் நந்தா பெரியசாமி,” என அவர் பதிவிட்டுள்ளார்.

நந்தா பெரியசாமி தற்போது தமிழில் சேரன், கௌதம் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ள ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தை இயக்கி முடித்துள்ளார். நவம்பர் இறுதியில் இப்படம் வெளியாக உள்ளது.

** அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share