3அயலானாக மாறிய ஹீரோ!

Published On:

| By Balaji

ஹீரோ திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கு ‘அயலான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவிகுமார் இயக்கவுள்ளார்.

சையின்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் ‘டைம் ட்ராவல்’ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இன்று நேற்று நாளை படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. அதே போன்ற அறிவியல் அம்சம் கொண்ட கதையாக இந்தத் திரைப்படமும் அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளதால், ஏலியன்கள் குறித்த கதையாக இது இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 8 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த டைட்டில் வெளியிடப் பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.�,”strFileNAME::::106.md::::”

ஹீரோ திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கு ‘அயலான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த ஹீரோ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் தயாரிக்கவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தை ‘இன்று நேற்று நாளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரவிகுமார் இயக்கவுள்ளார்.

சையின்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் ‘டைம் ட்ராவல்’ கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இன்று நேற்று நாளை படம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. அதே போன்ற அறிவியல் அம்சம் கொண்ட கதையாக இந்தத் திரைப்படமும் அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப்படத்திற்கு ‘அயலான்’ என்று பெயரிடப்பட்டுள்ளதால், ஏலியன்கள் குறித்த கதையாக இது இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 8 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த டைட்டில் வெளியிடப் பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share