Tசூரரைப் போற்று மெகா திரையா? OTTயா?

entertainment

நடிகர் சூர்யாவிற்கு சொந்தமான 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ‘சூரரைப் போற்று’.

இந்தப்படத்தின் பணிகள் முடிவடைந்து தணிக்கையும் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்று அவ்வப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் கோபத்துக்குஆளாகியிருக்கும் சூர்யா, இப்போது அவர் நடித்த படத்தையும் இணையத்தில் வெளியிடுவாரா? என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த விஷயத்தில் என்னதான் நடக்கிறது? அமேசான் பிரைம் தென்னிந்தியாவில் முதல் படத்திலேயே வலுவாக காலூன்ற திட்டமிட்டு அந்நிறுவனம் ‘சூரரைப் போற்று’படத்தை நேரடியாக வெளியிட என்ன விலை கொடுக்கவும் அன்று தயாராக இருந்தது. சூர்யாவைப் பொறுத்தவரை சமீப ஆண்டுகளாக அவர் நடித்து வெளி வந்த எல்லா படங்களும் வணிகரீதியாக தோல்வியைத் தழுவியது. இத்தோல்விக்கு முடிவுகட்ட சூரரைப் போற்று படத்தை திரையரங்கில் வெளியிட்டு வெற்றியை அனுபவிக்க விரும்பினார் சூர்யா என்கிறது தயாரிப்பு வட்டாரம்.

ஆனால் அதற்கான வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. அமேசான் நேரடியாக வெளியிட்ட ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ என இரண்டு படங்களும் கதாநாயகியை முன்னிலைப்படுத்திய படங்களாகும். OTT தளத்தில் எதிர்பார்த்த குறைந்தபட்ச வெற்றியைக் கூட இப்படங்கள் பெறவில்லை. அந்த தோல்வியில் இருந்து மீண்டு வர சூர்யாவின் விருப்பு வெறுப்பைத் தாண்டி, இணைய நிறுவனத்தினர், வட இந்தியாவைப் போல தென்னிந்தியாவிலும் ஒரு பெரிய படத்தை வாங்கி வெளியிடவேண்டும் என்பதற்காக சூரரைப்போற்று படத்தை மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

அதற்காக சுமார் ஐம்பது கோடி வரை கொடுக்கவும் அவர்கள் தயாராகவிருப்பதாக சூர்யா தரப்புக்கு கூறப்பட்டிருக்கிறது. தொகை சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அந்தப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறதென சொல்கிறார்கள். படக்குழு எதிர்பார்க்கிற தொகையை அமேசான் நிறுவனம் கொடுத்தால் நேரடியாக இணையத்தில் படம் வெளியாகலாம் என்று சொல்கிறார்கள்

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தயாரிப்பு – திரையிடல் கடுமையாக பாதிக்கப்பட்டு மூலதனம் முடங்கியிருப்பதால், முடித்து வைக்கப்பட்ட படங்களின் பட்ஜெட் குறைந்தபட்ச லாபத்துடன் படங்களை OTT தளத்தில் வெளியிட தயாரிப்பாளர்கள் சம்மதிக்க தொடங்கியுள்ளனர்,

**-இராமானுஜம்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *