முதல்வருக்கு திருமண அழைப்பிதழ் வைத்த விக்னேஷ்சிவன், நயன் தாரா

Published On:

| By admin

விக்னேஷ் சிவன் மற்றும் நயன் தாரா இருவரும் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தங்களது திருமண அழைப்பிதழை வழங்கினர்

இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகத் தன்மை கொண்ட விக்னேஷ் சிவனும், லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகையுமான நயன் தாராவும் நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றினர். அப்போது முதல் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சுற்றுலா செல்லும் இடங்களில் ஜோடியாகப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்தனர். இதனால், எப்போது இந்த ஜோடிக்குத் திருமணமாகும் என்பதே ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகத் திருமண ஏற்பாடுகள் இரு வீட்டுத் தரப்பிலும் இருந்து நடைபெற்று வந்தது. முதலில் திருப்பதியில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டது.

ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முக்கிய பிரபலங்கள் உட்பட 200 நபர்கள் வரை விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. அந்தவகையில் நேற்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து இருவரும் அழைப்பு விடுத்தனர். அப்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

ஜூன் 8ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியும், ஜூன் 9-ம் தேதி அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் திருமணமும் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share