dவிஜய் தேவரகொண்டா படத்தில் மைக் டைசன்

Published On:

| By Balaji

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பான்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘லைகர்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. அதில் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

அவருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா அது பற்றி பெருமையுடன் பதிவிட்டிருந்தார். இன்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை சார்மி கவுர், “எனது புதிய அபிமானி நிச்சயம் இவர்தான். ஸ்டீல் பாடியுடன் தங்கமான இதயத்துடன் சூப்பர் கூல் சாதனையாளர். ‘லைகர்’ குழுவினர் அவர்களது சிறந்த நேரத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் குருவான ராம் கோபால் வர்மாவும் அக்குழுவினரின் புகைப்படங்களைப் பகிர்ந்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

**-அம்பலவாணன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share