தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இயக்குநர் தமன் தமிழ் படங்களுக்கும் அவ்வப்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கில் நடிகர் மகேஷ் பாபு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார். இவரைத்தொடர்ந்து தமனும் கொரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமன் கூறுகையில், “கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய பின்னரும் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது. லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் எனது மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனின் 20ஆவது பட பணிகளைத் துவங்கி அது தொடர்பான நிகழ்வுகளை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து இருந்தார் தமன். இப்பட இசை பணியின்போது சிவகார்த்திகேயன், இயக்குநர் அனூதீப் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நடிகர் அருண்விஜய், நடிகை மீீீனாவின் ஒட்டுமொத்த குடும்பம், நடிகை திரிஷா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-இராமானுஜம்**
�,