tதோனிக்கு முதல்வர் தலைமையில் பாராட்டு விழா!

Published On:

| By Balaji

2021 ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பாராட்டிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருப்பதாக தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இதனிடையே, சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வருகிற 20ஆம் தேதி (சனிக்கிழமை) பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share