நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது இருவருமே அவரவர் படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதிலும் சமந்தா முழு நேரமாக நடிப்பில் பிசியாகிவிட்டார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 17 அன்று வெளியாக உள்ள புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு மட்டும் சமந்தா சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாங்கிய சம்பளத்திற்குக் குறைவில்லாமல் தாராளமாகக் கவர்ச்சி காட்டியுள்ளார். ‘ஓ சொல்றியா மாமா’ என்கிற பாடலுக்கு ஓவர் லோ நெக் ஜாக்கெட் மற்றும் நீல நிற குட்டை பாவாடையில் நடனமாடியுள்ளார் சமந்தா என்கின்றனர்.
விவாகரத்திற்குப் பிறகு சமந்தா சற்று அமைதியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி ஒரு மாற்றத்தை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.
இந்தநிலையில் சமந்தா நடனமாடிய பாடல் கடந்த வாரத்தில் வெளியானது. யூடியூபில் இதுவரை அந்த பாடல் 21 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ஒரு மில்லியன் விருப்பங்களைப் பெற்றுள்ளது.
தமிழ்ப் பதிப்பில் இந்த பாடலை விவேகா எழுத ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். இந்த நிலையில் இந்தப் பாடலுக்கு தற்போது ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
காரணம் இப்பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள், ஆண்கள் காம எண்ணம் கொண்டவர்களாக மட்டுமே சித்தரித்து எழுதப்பட்டதாகக் கூறி அதனைத் தடை செய்ய வேண்டும் என ஆந்திர நீதிமன்றத்தில் ஆண்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
**-அம்பலவாணன்**
�,