சின்னமெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லைனு ஜிகே வாசன் சொல்லியிருக்காரு. இதை பேப்பர்ல படிச்சேன். இதைப் பாத்துட்டு டக்குனு இன்னொரு செய்தியும் ஞாபகம் வந்துச்சு. அதாவது சைக்கிள் சின்னம் கேட்டு சென்னை ஹைகோர்ட்ல ஜிகேவாசன் சில வருடம் முன்னாடி கேஸ் போட்டிருந்தாரு. எங்களுக்கு சைக்கிள் சின்னம் கொடுக்காததாலதான் தோத்துட்டோம். அதனால சைக்கிள் சின்னத்தை திரும்ப கொடுக்கணும்னு கோர்ட்ல வாதாடின வாசனே இப்ப சின்னம் ஒரு பிரச்சினையே இல்லைனு சொல்றாரேனு… எனக்கு ஒரு டவுட் வந்துச்சு.
இதைப் பத்தி எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணன்கிட்ட கேட்டேன். யாருக்கும் சொல்லிடாதேனு ஒரு ரகசியத்தை சொன்னாரு. ‘முட்டாப் பயலே…அவரு சரியாதான் சொல்லியிருக்காரு. ராஜ்யசபா தேர்தலுக்கு ஏதுடா சின்னம்? வாசனுக்கு முக்கியமெல்லாம் ராஜய்சபா தேர்தல் தானே. சட்டமன்றத் தேர்தல்ல என்ன சின்னம் ஒதுக்கினா அவருக்கு என்ன?னு கேட்டுட்டு டீயைக் குடிச்சிட்டு சைக்கிளை எடுத்துட்டுப் போயிட்டாரு.
என்னடா இது சின்னத்துக்கு வந்த சோதனை…நீங்க அப்டேட்டைப் பாருங்க.
**சப்பாணி**
கொரோனா பரப்புவோரை விட கொடூரமானவர்கள்.. தைலம் போட்டு தலைவலியை பரப்புவர்கள்
**amudu**
ராகவேந்திரா மண்டபம் சொத்துவரி விவகாரத்தில் ‘அனுபவமே பாடம்’. -ரஜினிகாந்த்.
கட்சி ஆரம்பிச்சி இருந்தாலும், இதே டயலாக்கைத் தான் இப்போது சொல்லி இருப்பீங்க.
**மயக்குநன்**
2016 முதல் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?- உயர் நீதிமன்றம் கேள்வி.
எது எப்படியோ… எல்லா டாஸ்மாக் கடைகளையும் ஒரு நாப்பது நாளைக்கு மூட வச்ச பெருமை கொரோனாவுக்குதான் உண்டு எசமான்..!
**தர்மஅடி தர்மலிங்கம்**
பிரதமர் நரேந்திர மோடிக்கு சொந்தமாக வாகனம் இல்லை -சொத்து விபர கணக்கில் தகவல்!
# அதுக்கு தான் புதுசா விமானம் வாங்குனீங்களா..
It’s not crazy if it works ???? pic.twitter.com/gZwSiTrrma
— CCTV_IDIOTS (@cctv_idiots) October 15, 2020
**மயக்குநன்**
அதிமுகவில் இருந்து ஒருவர் வெளியேறினால், 100 பேர் வருவார்கள்!- கடம்பூர் ராஜு.
டிவியில நேத்து ‘பாட்ஷா’ படம் பார்த்திருப்பாரு போல..?!
**⭐மித்ரன்**
வெளிநாடுகளிலிருந்து ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் இறக்குமதிக்கு தடை விதித்து மத்திய அரசு – செய்தி #புரிஞ்சி போச்சி ஜி.. ஜியோ ப்ரிட்ஜ், அதானி ஏ.சி வரப்போகுது அதானே..?!
**மயக்குநன்**
நான் ‘நெருப்பு’, பாஜக என்னை நெருங்க முடியாது!- காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி.
இந்த நியூஸை வச்சு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ‘குளிர் காயாம’ இருக்கணுமே தாயீ..!
**சரவணன். ℳ**
ரஜினி சொத்து வரிக்கு விலக்கு கேட்டதன் பலன்கள்.
~ 20 வருசத்துக்கு மேல இருக்கும் மண்டபம் 2008 லிருந்து இயங்கறதா கணக்கு காட்டியது,
~ 5000 சதுரடிக்கு மேல இருக்கற மண்டபம் வெறும் 250 சதுரடின்னு காட்டினது,
~ கர்நாடக வங்கிகளில் சேமிப்பு
வம்பை விலை கொடுத்து வாங்கறதுங்கறது இதுதான்…
**கோழியின் கிறுக்கல்!!**
‘ஏம்மா அம்மா வீட்டுக்கு போற!?’ என்று தொடங்கி,
‘நீ வேணா ஒரு வாரம் உங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டு வாயேன்!!’ என்பதாக தொடர்கிறது திருமண வாழ்க்கை!!
**ℍ???????????????????????????????????????????????? ℝ????????????**
ஏன்டா மணியா இப்ப யாராவது
அண்ணா பல்கலைக்கழகம் பத்தி யாராவது பேசுறாங்களா?
அதெல்லாம் கேட்கலீங்ணா. முத்தையா முரளிதரன் பயோபிக்ல விஜய் சேதுபதி நடிக்கிறதை பத்திதான் பேசறாங்ணா..
**PrabuG**
பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை – அமைச்சர் கே.பி.அன்பழகன்.
பெரியய்யா மட்டும் ட்வீட் போடலைன்னா….
**Arulraj**
75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி
ஏற்கனவே வெளி வந்த 10 ரூபாய் நாணயத்துக்கே , எது ஒரிஜினல் எது டூப்ளிகேட் தெரியாம முழிச்சிட்டு இருக்கோம் இதுல 75 நாணயத்தை எப்படி கண்டு முடிக்க போறோமோ
**-லாக் ஆஃப்**
�,”