வள்ளுவர் மட்டும் இப்ப வாழ்ந்திருந்தார்னா லாக்டவுன் மீறல்னு எக்ஸ்ட்ரா ஒரு அதிகாரம் எழுதி அதுல பத்து குறளையும் சேத்துருப்பாரு. கொரோனாவுக்கு ஊரடங்கு ஒரு தீர்வே இல்லைனு சில டாக்டர்கள் சொல்றாங்க. ஏற்கனவே ஆண்டாண்டு காலமா ஆண்கள் போட்ட லாக்டவுனை மீறி இப்பதான் வெளிய தெருவுக்கு வர்றோம், எங்களுக்கு மறுபடியும் லாக்டவுனானு பெண்ணுரிமைக் காரங்களெல்லாம் பொங்குறாங்க. சரி, நம்ம வீட்டு மகாராணிங்க என்ன நினைக்கிறாங்கனு அபார்ட்மென்ட்ல ஒரு ரவுண்டு வந்தேன். அவருக்கு மூணு மாச சமையல் கோர்ஸ் கத்துக் கொடுத்துட்டேன்னு பக்கத்து வீட்டு அம்மா பெருமையா சொன்னாங்க. கோயிலுக்கு போய் வந்தாதாம்ப்பா நிம்மதியா இருக்கு, அந்த நாள் என்னிக்கு வருமோனு எதிர் வீட்டு ஆன்ட்டி கன்னத்துல போட்டுக்கிட்டாங்க. புதுசா கல்யாணமாகி வந்த அந்த சின்னப் பொண்ணுக்கிட்ட கேட்டேன்… ‘எங்க குமாரு. நாலு மாசமா எங்கயும் சுத்தமுடியலை. அது கூட பரவாயில்லை. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா, பேங்க்ல லோன் போட்டாவது மாமியாருக்கு பக்கத்து மாவட்டத்துல ஒரு வீடு கட்டிக் கொடுத்திருப்பேன். எடப்பாடி இதெல்லாம் சொல்லாம விட்டுட்டாரே?’னு போட்டுச்சு ஒரு போடு. எங்கெல்லாம் வந்து நிக்கிறாரு பாருங்க எடப்பாடியாரு. சர்வே கிடக்குது சர்வே சர்வைவல்தான் முக்கியம்னு வீட்டுக்குக் கிளம்பிட்டேன்.
அப்டேட்ஸ் உங்களுக்காக வெயிட்டிங்…
#OnlineClasses #onlinelearning
😂 pic.twitter.com/yUufUKgCRE— Siluku (@Siluku6) August 8, 2020
**கோழியின் கிறுக்கல்!!**
ஆதாரம் இல்லாமல் எதையாவது கூறிவிட்டால், சேதாரம் அதிகம் சந்திக்க நேரிடும்!!
**மயக்குநன்**
விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படும்!- முதல்வர் பழனிசாமி.
இதைக் கேட்கும்போது, ‘விரைவில் கட்சி தொடங்குவேன்’னு ரஜினி சொல்ற மாதிரியே இருக்கு அண்ணே..!
Good morning everyone .Coconut water is good for health.😊@Poonam_Datta @MahaForest @IfsSitanshu @susantananda3 @SudhaRamenIFS @welcomet0nature @aranya_kfd pic.twitter.com/vcNtOvY5Xs
— Mahesh Naik (@MaheshN1976) August 8, 2020
**மளிகைக் கடைக்கரான்**
அதென்ன எல்லா மீடியாவும் “வந்தே பாரத் திட்டத்தில் இந்தியா அழைத்து வரப்பட்ட” னு வாசிக்கிறான்.
“அரசு உதவி இல்லாமல் 4 மடங்கு கட்டணம் கட்டி நாடு வந்த” னு சொல்லுங்கடா.
#AirIndia வா இருக்குற வரைக்கும்தான் 4 மடங்கு கட்டணம். ரிலையன்ஸ் இந்தியா ஆயிட்டா 400 மடங்கு கட்டணம் ஆகிரும். Mind it.
When you’re over 40 and the film starts.. pic.twitter.com/PShIk5wvpH
— Buitengebieden (@buitengebieden_) August 7, 2020
**நாகராஜ சோழன் MA.MLA**
OK என்கிற பெரிய வார்த்தையில் வெறும் K யை மட்டும் type பண்ணி பழக்கத்திற்கு கொண்டு வந்தது கண்டிப்பாக பெண்களாகத்தான் இருக்க முடியும்.
**மயக்குநன்**
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது எல்லோருடைய கனவாக இருந்தது!- முதல்வர் பழனிசாமி.
இன்னமுமே அது கனவாதான் இருக்கு தலைவரே..!
ஓஓஓஓஓஓஓஓஓஓ
😍😍😍 pic.twitter.com/pDTHcnBJCu
— டேனியப்பா (@minimeens) August 7, 2020
**mohanram.ko**
காலம் எவ்வளவு வேகமா சுத்துதுன்னு பார்த்தீங்களா?
உடம்பு சரியில்லைனு சொன்னாலும் வேலைக்கு வா னு சொன்ன உங்க வாயாலேயே, தும்மல் வந்தாலே லீவு போட வேண்டியதுதானே னு சொல்ல வச்சிடிச்சி பார்த்தீங்களா?
**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**
மாற்றி மாற்றி கூட்டணி வைத்து எந்த பலனும் கிடைக்கவில்லை – பிரேமலதா விஜயகாந்த்!?
ஒரு பக்கம் மாறுனா பலன் கிடைக்கும் இப்டி ஒராயிரம் பக்கம் மாறுனா எப்படி பலன் கிடைக்கும்!?
## டயலாக் ஒன்னு தான் ரியாக்ஷன் வேற.. செம்ம 😁😁 ## pic.twitter.com/lilzK1ky5W
— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi) August 8, 2020
**தன்னிச்சையாக உதித்த தமிழ் பேச்சு**
கருணாநிதி அவர்கள் மேடையில் அமர்ந்திருந்தார். பக்கத்தில் ரஜினிகாந்த்.
துரைமுருகனும் மேடையில் உடன் இருந்தார்.
அது ஒரு கலகலப்பான திரைப்பட விழா நிகழ்ச்சி.
சில வருடங்களுக்கு முன்பு தொலைக் காட்சியில் பார்த்து ரசித்தது.
ரஜினி பேசவேண்டிய முறை வந்தது. ரசிகர்களின் பலத்த கை தட்டல்களோடும், விசில் சத்தங்களோடும் ரஜினி மைக் முன்பு வந்தார். பேச ஆரம்பித்தார்.
வழக்கமான அவருடைய ஸ்டைலில் கதை சொன்னார். அதன் பிறகு மேடையில் அமர்ந்திருந்த துரைமுருகனை பார்த்தார் சிரித்தார்.
ஒரு விமான பயணத்தில் துரைமுருகனுடன் பயணித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ரஜினி.
இருவரும் பக்கத்து பக்கத்து இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்தார்களாம். பல்வேறு விஷயங்களையும் பேசிக்கொண்டே வந்தார்களாம்.
அதை அந்த விழா மேடையில் விவரித்த ரஜினி, சிரித்துக் கொண்டே ஒரு கையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு, துரைமுருகனை பார்த்தபடி சொன்னார்:
“துரைமுருகன் அவர்களை பார்த்தால் நமக்கு இருக்கும் அதே பழக்கம் இவருக்கும் இருக்கும் எனத் தோன்றியது.
(ரஜினி குறிப்பிட்டது மது பழக்கம் என்பதை ரசிகர்கள்
புரிந்து கொண்டார்கள்)
ரஜினி தொடர்ந்தார்
“அதனால் விமானத்தில் என் பக்கத்தில் இருந்த துரைமுருகன் அவர்களின் காதருகில் சென்று நீங்கள் ரெட் லேபிள் சாப்பிடுவீர்களா அல்லது பிளாக் லேபிளா என்று கேட்டேன்.”
ரஜினி இப்படி பேச ஆரம்பித்தவுடன் தொலைக்காட்சியில் இதை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு திக்கென்றது.
“ஏன் ஜான் ?”
“ரெட் லேபிள், ப்ளாக் லேபிள் எல்லாம் விஸ்கி பெயர்கள்.
ஒரு பொது மேடையில் ரஜினி இந்த டாப்பிக்கை ஓப்பனாக
பேசுகிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது.”
“அப்புறம் என்ன ஆச்சு ?”
துரைமுருகன் கூட கொஞ்சம் தர்மசங்கடமாக நெளிந்தார். ஆனால் ரஜினி தங்கு தடையின்றி நடந்த விஷயத்தை மைக்கில் சொல்ல ஆரம்பித்தார்.
“ஆனால் நான் கேட்ட கேள்விக்கு துரைமுருகன் சார் சிரித்துக் கொண்டே அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை என்று சொல்லி விட்டார்.துரைமுருகன் சார் இப்படி சொல்வார் என நான் எதிர்பார்க்கல. நான் ரெட் லேபிளும் இல்லை. ப்ளாக் லேபிளும் இல்லை என்று சொல்லிட்டார் துரைமுருகன் சார்.”
ரஜினி இப்படி பேசும்போது கருணாநிதி அவர்கள் தன் முழு கவனத்தையும் ரஜினி மீது திருப்பினார்.
ரஜினி பேசுவதை மிக மிக உன்னிப்பாக கவனித்தார். ரஜினி பேசப் பேச, தன் முன்னால் இருந்த ஒரு துண்டு காகிதத்தில் எதையோ குறித்துக் கொண்டார் கருணாநிதி அவர்கள்.
தான் பேச வேண்டிய முக்கியமான விஷயங்களை மேடையில் இருக்கும்போதே அவ்வப்போது குறிப்பெடுத்துக் கொள்வது கருணாநிதி அவர்களின் வழக்கம். அப்படித்தான் ரஜினி சொன்ன இந்த விஷயத்தையும் கருணாநிதி அவர்கள் குறிப்பெடுத்துக் கொண்டார். ரஜினியும் பேசி முடித்தார்.
இப்போது நிகழ்ச்சியின் நிறைவாக கருணாநிதி அவர்கள் பேச ஆரம்பித்தார்.
கரகரப்பான அந்த காந்தக் குரலை கேட்டவுடனே தொண்டர்களின் கைதட்டல்கள்.
அதற்கு நடுவே தான் பேச வேண்டிய எல்லா விஷயங்களையும் பேசிவிட்டு ரஜினி – துரைமுருகன்,
ரெட் லேபிள் ப்ளாக் லேபிள் மேட்டருக்கு வந்தார் கருணாநிதி அவர்கள்.
பொதுமக்களும் ஆர்வத்தோடு கருணாநிதி அவர்கள் என்ன சொல்லப் போகிறார் என்பதை கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
ரஜினியும் உன்னிப்பாக கவனித்தார்.
கருணாநிதி அவர்கள் சொன்னார்:
“துரைமுருகனிடம் ரஜினி நீங்கள் ரெட் லேபிளா அல்லது பிளாக் லேபிளா என்று கேட்டதற்கு நான் இரண்டும் இல்லை என்று துரைமுருகன் பதில் சொல்லியிருக்கிறார்.
ஆனால் அப்படி சொல்வதற்கு பதிலாக இப்படி சொல்லி இருக்கலாம்” என்று சொல்லி நிறுத்தினார் கருணாநிதி அவர்கள்.
எல்லோரும் மௌனமாக கருணாநிதி அவர்கள் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதை உற்று கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
துரைமுருகனும் தலைவர் சொல்ல போவதை மிக மிக கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
கருணாநிதி அவர்கள் தொடர்ந்தார்: “ஆம். நான் ரெட்டும் இல்லை பிளாக்கும் இல்லை. என்னுடைய லேபிள் எப்போதும் பிளாக் அண்ட் ரெட். ஆம். கருப்பும் சிவப்பும்தான் எப்போதும் என்னுடைய மாறாத அடையாளம் என்று துரைமுருகன் சொல்லியிருக்க வேண்டும்.”
இப்படி கருணாநிதி அவர்கள் சொன்னவுடன் கூட்டத்தில் பலத்த கரகோஷம். துரைமுருகன் ஒருபக்கம் சிரிக்க ரஜினிகாந்த் இன்னொரு பக்கம் சிரிக்க,
அந்த மேடையே கலகலப்பானது.
இது எந்தவிதமான முன்னேற்பாடும் இல்லாமல் கருணாநிதி அவர்கள் இயல்பாக பேசிய பேச்சு.
தன்னிச்சையாக உதித்த
தமிழ் பேச்சு.
விழிப்புணர்வோடு எல்லாவற்றையும் கவனிக்கும், வித்தியாசமாக எதையும் சிந்திக்கும் ஆற்றலுக்கு அடையாளமான பேச்சு.
இப்படி சமயோசிதமாக பேசுவதில் கருணாநிதி அவர்களை அடித்துக்கொள்ள
இன்றுவரை வேறு ஆளே இல்லை.
**லாக் ஆப்**
�,”