வழிகாட்டும் குழுவுக்கு ரெண்டு திசை பாக்கி: அப்டேட் குமாரு

entertainment

அண்ணே நம்ம சங்கத்துல பிரச்சினையாயிடுச்சு. அதனால வழிகாட்டும் குழு ஒண்ணு போடணும். நீங்களும் அதுல ஒரு மெம்பர் நாளைக்கு கூட்டத்துக்கு வந்துடுங்கனு சொன்னாப்ல அபார்ட்மெண்ட் அசோசியேஷன்ல ஒருத்தர். எத்தனை பேர் மெம்பர்னு கேட்டேன்…பத்து பேருன்னு சொன்னாப்ல.

ஏன்யா இருக்கிறதே எட்டு திசைதான். ஆளுக்கொரு பக்கமாய் வழிகாட்னா கூட இன்னும் ரெண்டு பேருக்கு ரெண்டு திசை வேணுமே என்ன பண்ணுவீங்கனு கேட்டேன். கொஞ்சம் கூட அலட்டிக்காத அந்த நண்பரு, “என்னங்க தெரியாத மாதிரி கேட்குறீங்க. வழிகாட்டுறதுக்கா இந்த குழுவை போடுறாங்க. வேற வழியில்லாமதானே போடுறாங்க?’னு சொல்லிக்கிட்டே மாடிப் படியேறிட்டாரு.

எனக்கு ஒரு வழிகாட்டுங்கனு நானும் கெளம்பிட்டேன். நீங்க அப்டேட்டை பாருங்க.

**தர்மஅடி தர்மலிங்கம்**

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் சந்திப்பு-செய்தி!?

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

திரும்ப திரும்ப பேசி பேசி

திரும்ப திரும்ப ‘முதல்வர் வேட்பாளர்’ யாருன்னு சொல்லும் கனவு காணலாம்!?

**மயக்குநன்**

நாம் தமிழர் கட்சி மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளது!- சீமான்.

ஆனா, இந்த விஷயம் மக்களுக்கே தெரியாது..!

**சரவணன். ℳ**

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க மத்திய அரசு முடிவு.

நிர்மலா சீதாராமன் ~

“அப்ப ஜிஎஸ்டியை வசூல் பண்ணி குடு…”

**சிவம்**

உண்மையிலே இந்த ட்ரம்புக்கு கொரானா தானா? இல்ல நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் நேரத்துல வர்ற ஹார்ட் அட்டாக் மாதிரி அத்தனையும் நடிப்பா?!

**மயக்குநன்**

ரஜினிகாந்தின் புதிய கட்சி வரும் 2021 பிப்ரவரியில் தொடங்கப்படும் என தகவல்!

வாவ்… ஆன்மீக அரசியல் காதலர் தின மாசத்துல ஆரம்பிக்கப் போகுதா..?!

**தர்மஅடி தர்மலிங்கம்**

அக் 31-ம் தேதி வரை மெரினா செல்ல அனுமதி இல்லை!- செய்தி!?

ஆஹான்..! எது நடக்கவிருக்கிறதோ அந்த தர்ம யுத்தம் நன்றாகவே நடக்காது போலிருக்கே!

**ரஹீம் கஸ்ஸாலி**

“முதல்வர்- துணை முதல்வர் வீடுகளில் தனித்தனியே ஆலோசனை நடக்கிறதே?” என்ற கேள்விக்கு, “இது அண்ணன், தம்பிக்குள் நடக்கும் பேச்சுவார்த்தை” என்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்.

இதில் யார் அண்ணனா இருப்பது?, யார் தம்பியா இருப்பதுன்னுதான் பஞ்சாயத்தே?…

**PrabuG**

பாதை எதுவென கேட்டால் கீதையை சொல்லி ஒப்பேத்துவார். அவர் யார்..

**லிட்டில் கிருஷ்ணா**

அழகான பொண்ணு சிரிச்சிட்டு போனஅடுத்த ரெண்டு செகன்ட்குள்ள_பையன் கட்டுறமனக்கோட்டை இருக்கே!ராஜராஜசோழனால கூட கட்ட முடியாது!…

ராஜராஜ சோழன் நான்……..

**லாக் ஆப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *