nபுரட்டாசியின் கடைசி நாள்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

புரட்டாசி மாதத்தின் கடைசி நாளில் ஒரு கோழியின் மனநிலையில் இருக்கிறேன் அப்படினு ஒரு கவிதை எழுதி லவ்வர் கிட்ட கொடுத்திருக்கான் நம்ம பையன் ஒருத்தன். அதுக்கு அந்த பொண்ணு,.. லூசு பயலே கோழிக்கு காலண்டர் பாக்க தெரிஞ்சா அது ஏண்டா லாரியிலயே கம்பி எண்ணிக்கிட்டு இருக்குனு சொல்லி கிழிச்சு போட்டுட்டு போயிடுச்சு.

பாவம் அந்தப் பையன். நீங்க அப்டேட் பாருங்க

**கடைநிலை ஊழியன்**

தினமும் காலையில் நாம் சொல்லும் முதல் பொய்..

வீட்டில் இருந்து கிளம்ப கூட செய்யாமல் சொல்லிவிடுகிறோம்..

“இன்னும் ஐந்து நிமிசத்தில வந்துருவேன்”

**தர்மஅடி தர்மலிங்கம்**

கடன் வாங்காமல் இருந்திருக்கலாம்..

#EMI-யோடு ஃபைன் கட்டுவதை தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

**நாகராஜ சோழன் MA.MLA**

எவ்ளோ சம்பாரிக்கற என்பதை விட …

எவ்வளவு சேத்தி வெச்சிறுக்க, தேவையான செலவுதான் என்றாலும் நல்ல யோசனை பண்ணி செய்யணும்னு தலைவர் கிட்ட கத்துகணும்.

#அனுபவமே_பாடம்

**மயக்குநன்**

நடப்பு ஆண்டில் இந்திய பொருளாதாரம் 10.3 சதவீதம் சரிவடையும்!- பன்னாட்டு நிதியம் கணிப்பு.

இப்ப மந்தநிலையில் இருக்கிறது, அடுத்து ‘நொந்த’நிலைக்குப் போகும்னு சொல்றாங்களோ..?!

**ℍ???????????????????????????????????????????????? ℝ????????????**

திருமணத்துக்கு முன்பு காதல் இருந்ததை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து இருக்கலாம்!

#அனுபவமே_பாடம்

**ச ப் பா ணி**

அரியர் பணத்தை கட்டி ஆல் பாஸ் ஆகியிருக்கலாம்

#அனுபவமே_பாடம்

**தர்மஅடி தர்மலிங்கம்**

ரேகை வெச்சா ஏத்துக்கல.. பயோ மெட்ரிக் கருவியால் ரேஷன் கடைகளில் வாக்குவாதம்!

ஹை..! ஒரே நாடு ஒரே ரேஷன் வொர்க்கவுட் ஆகிடுச்சு..!

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**

என்னம்மா அங்க சத்தம்..?

சும்மா மாநகராட்சில மேல் முறையீடு பண்ணிகிட்டு இருந்தேன் மாமா..

**மயக்குநன்**

எனக்கு கரோனா இல்லை என்பதை நிரூபிக்க அழகான பெண்களை முத்தமிடுவேன்!- ட்ரம்ப்.

‘கிஸ்’ட காலம்டா சாமி..!

-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share