(அப்டேட் குமாரு

entertainment


**amudu**
வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார். -ப.சிதம்பரம்.
அது, எந்த தேதி முதல்ன்னு கேட்டு சொல்லுங்களேம்மா.


**balebalu**
102வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை – செய்தி
தினம் தினம் இப்படி செய்தி போடுறதுக்கு பதிலா நாலு மாநில தேர்தல் முடிகிற வரை விலையில் மாற்றமில்லை ன்னு சிம்ப்பிளா நியூஸ் போட்டுடலாமே

**amudu**
திமுக விளம்பர அரசியல் நடத்தி வருகின்றது. -ஓ.பி.எஸ்.
ரெய்டு அரசியலும் நடத்தி வருதுன்னும் சொல்லலாம்.


**நாகராஜசோழன்.MA.MLA**
தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு. செய்தி
தங்கம் விலை கம்மியான தான் செய்தி, அதிகம் ஆகறது வழக்கம் தானே…

**மயக்குநன்**
தொண்டர்கள் வேறு, நான் வேறு அல்ல!- பிரதமர் மோடி.
அப்ப… 8 ஆயிரம் கோடி ரூவா விமானத்தில் எல்லாரையும் ஏத்திட்டுப் போவீங்களா ஜீ..?!


**balebalu**
வாழ்க்கை என்பது விசித்திரமானது
கடைசி பெஞ்ச் காரனை விசிட்டிங் கார்டுடன் பென்ஸ் காரிலும் போக வைக்கும்
முதல் பென்ச் காரனை ரேஷன் கார்டுடன் கியூ விலும் நிற்க வைக்கும்

**PrabuG**
அஞ்சு நாள் பரபரப்பா வேலை செஞ்சுட்டு, அஞ்சு வருஷத்துக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிடனும்.
அதுக்கு நீ அரசியல்வாதியாதான் ஆகனும்.

**மயக்குநன்**
மக்களிடம் கொள்ளை அடிப்பது காங்கிரஸ் கொள்கை!- பிரதமர் மோடி. 
மக்களைத் தெளிய வச்சு, தெளிய வச்சு அடிக்கிறதுதான் பாஜகவோட கொள்கை போல..?!

**தர்மஅடி தர்மலிங்கம்**
கமுதி பேரூராட்சியில் 11 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு; செய்தி.
கமுதி ரொம்பவும் அமைதியான பேரூராட்சி போல..

**மயக்குநன்**
டீ மாஸ்டராக மாறி வாக்கு சேகரித்த நடிகை குஷ்பு!- செய்தி
இந்த விஷயம் வடை மாஸ்டருக்கு தெரியுமான்னு தெரியலியே..?!

**-லாக் ஆஃப்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.