அரியர் சஷ்டி கவசம்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

எங்க போனாலும் இளைஞர்களின் எழுச்சி நாயகனே எடப்பாடியார்ன்ற குரல்தான் கேட்குது. கல்வித் தரத்தை உயர்த்தறதுக்காக பின்லாந்து பயணம் போயிட்டு வந்த கல்வி அமைச்சர் செங்கோட்டையனை நினைக்குறப்ப ஒவ்வொரு ரோமமும் சிலிர்க்குது. இத விடுங்க… எங்க ஊர் எம்,எல்.ஏ. எலக்‌ஷன்ல நின்னு தோத்த வேட்பாளர் அண்ணன் ஒருத்தர்கிட்ட போன் பேசிட்டிருந்தேன். ஏந்தம்பி ஃபெயிலானவங்க பாஸ் பண்றதல்லா… தேர்வுல மட்டும்தானா… தேர்தல்ல கிடையாதா… தேர்தல்ல ஃபெயிலா போன எங்க எல்லாரையும் பாஸ் பண்ணிவிடுவாரா எடப்பாடினு கேட்க்குறாரு. இந்த ஆங்கிள்ள நாம மட்டும்தான் யோசிக்கிறமா… இல்ல வேற யாராச்சும் ரூம் போட்டு யோசிக்குறாங்களானு தேடிட்டு வாரேன்…

நீங்க அப்டேட்ட பாருங்க

**ச ப் பா ணி**

அரியருக்கு மாங்கு மாங்குனு படிச்ச 90 கிட்ஸ் எங்க..

அரியர்ஸ் தேர்வுக்கு பணம் கட்டினாலே பாஸாகப்போகும் 2k கிட்ஸ் எங்க

**memes thamiza**

ஜி to அண்ணாமலை~

கட்சில சேந்த ஒரு நாள்லயே உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட..

#GoBackModi

**நாகராஜ சோழன் MA.MLA**

அரியர் பீஸ் கட்டணும் சொல்லி பணம் வாங்கி சரக்கு அடிச்சு காலி பண்ணிட்டேன், இப்போ எப்படி சமாளிக்கரதுண்ணு தெரியலையே….

**எனக்கொரு டவுட்டு**

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலை கிடையாது – முதல்வர் பழனிசாமி# அதானே, வேலையே இல்ல அப்பறம் எப்படி வேலை வாய்ப்பு..!

**James Stanly**

என் காலத்துல அய்யா EPS இருந்திருந்தா ஒரு 10th சர்டிபிகேட் ஆச்சும் வாங்கிருப்பேன்..

**காதல் கவிஞன்**

அரியர் பசங்க எல்லாம் நிம்மதியா இருக்காங்க…

அதில் Exam Fee கட்டாமல் இருக்கும் சிலரை பார்க்கும்போது தான் பாவமா இருக்கு…

**மயக்குநன்**

2021 தமிழக சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்!- நயினார் நாகேந்திரன்.

பார்வையாளர்கள் பகுதியிலா..?!

**தர்ம அடி தர்மலிங்கம்**

இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் – மத்திய அமைச்சருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம்!

ஏன்.? கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுத தெரியாதா.!?

**நாகராஜ சோழன் MA.MLA**

அப்பா~

அரியர் கிளியர் பண்ணிட்டு வேலைக்கு போறேன்னு சொன்ன…

வேலைக்கு எப்ப போவ???

**பூலித்தேவன்**

அரியர் மாணவர்களின் அரசனே ‘ என முதல்வரை புகழ்ந்து பேனர்…

அடேய்களா இவரே அரியர்ல தானயா சி எம் ஆனாரு

**மயக்குநன்**

இருசக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க பரிசீலனை!- நிர்மலா சீதாராமன் தகவல்.

அதுசரி… ஆட்சி சக்கரம் சுழலணும்ல..?!

**உள்ளூராட்டக்காரன்**

அப்படியே அந்த காதலென்னும் தேர்வெழுதி காத்திருக்கும் மாணவர்களுக்கும் பாஸ் போட சொன்னீங்கன்னா நல்லாருக்கும்

**லாக் ஆஃப்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share