வாட்ஸப் ஸ்டேட்டஸும் வாழ்க்கையும்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

காலையில எழுந்திருச்சதுமே வீட்டம்மா அலமாரியிலேர்ந்து ஏதோ ஆல்பத்தை வச்சி புரட்டிக்கிட்டிருந்தாங்க. என்ன தேடுறேன்னு கேட்டேன். இன்னிக்கு உலக போட்டோகிராபி டேவாம்… அதான் எனக்குப் பிடிச்ச போட்டோவை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸா வைக்கறதுக்காக தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னாங்க. சரினு விட்டுட்டேன்… கொஞ்ச நேரம் கழிச்சு அவங்க ஸ்டேட்டஸ் பார்த்தா, சின்னப் புள்ளையில அப்பா அம்மாவோட எடுத்துக்கிட்ட போட்டோ, ஸ்கூல் குரூப் போட்டோ, அக்கா தங்கச்சிகளோட இருக்கும் போட்டோ, ஒண்ணுவிட்ட தம்பியோட இருக்குற போட்டோ, பிள்ளைங்க போட்டோனு வரிசையா வந்துக்கிட்டே இருந்துச்சு. சரி மலரும் நினைவுகள்ல மூழ்கிட்டாப்ல நினைச்சு விட்டுட்டேன். ஆனா கடேசி வரைக்கும் கல்யாண ஆல்பத்துலேர்ந்து ஒரு போட்டோ கூட போடலை. ஏன்னு கேட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல, ‘உலக நிம்மதி தொலைத்த தினம்’ வருது. அதுக்காக எடுத்துக்கு வச்சிருக்கேன்னு சொல்றாங்க. நல்ல வேளை என் ஸ்டேட்டஸை அவங்க பார்க்கலை.

நீங்க அப்டேட்ஸை படிங்க.

**மயக்குநன்**

ஒரு சில மாநிலங்களுக்கு 2 தலைநகரங்கள் உள்ளன!- செல்லூர் ராஜு.

அதான்… உங்க கட்சிக்கே ‘ரெண்டு தல’ இருக்கே பாஸ்..?!

**தர்ம அடி தர்மலிங்கம்**

“மதுக்கடை கூட்டத்தில் வராத கொரோனா, விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வந்துவிடுமா?”- இந்து முன்னணி கேள்வி!?

அது அந்த கடவுளுக்கு தான் தெரியும்!?

இது எப்புடி இருக்கு!

**கோழியில் கிறுக்கல்**

‘போகட்டுமா?’ என்று கேள்விக்குள் அடங்கி இருக்கின்றன,

‘போகாதே’ என்ற ஆயிரம்‌ முறைக்கான கெஞ்சல்கள்!!

**மாஸ்டர் பீஸ்**

ஆறிப்போய் கிடைக்கும் ப்ரூ காப்பி யை விட,

சூடா கிடைக்கும் வர காப்பியே சிறந்தது!!!

**prabuG**

மேனேஜர் : ஆஃபீஸ் திறந்தாச்சு வேலைக்கு வாப்பா.

ஊழியர் : ஈ பாஸ் கிடைக்கலை சார்.

மே : ஈ பாஸ் ஈசியா கிடைக்குது. வேலைக்கு வாப்பா.

ஊ : கொரோனா பயமாயிருக்கு சார்.

மே : டாஸ்மாக் திறந்துட்டாங்கப்பா.

ஊ : செங்கல்பட்ட தாண்டி வந்துட்டேன் சார்..

**mohanram.ko**

உனக்கு வந்தா சாதா தும்மலு, எனக்கு வந்தா கொரோனா தும்மலா?

**கடைநிலை ஊழியன்**

ஊரடங்கு தளர்வு என்றால் என்ன ?

டாஸ்மாக் – திறந்திடு சீசே !!

கொரோனா டெஸ்ட் – குறைத்திடு சீசே !!

**நெல்லை அண்ணாச்சி**

பாட்டில்களை கைக்குழந்தயை ஏந்தும் தாயைப்போல்

பத்திரமாக தூக்கிச் சென்றனர்..

# உங்க .. வர்ணனையில தீயை வைக்க…

**myck**

நண்பா நான் சீக்கிரமா பணக்காரன் ஆகனும். எந்த ஜோசியர பாக்கலாம்?

நண்பன்: நீ ஜோசியர பார்க்காத. நீயே ஜோசியம் பார்க்கர தொழிலபாரு.!

**லாக் ஆப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share