இன்று கல்யாண நாளுங்குறதால சில பல கல்யாணங்கள அட்டன் பண்ணிட்டு வந்து டீக்கடையில உக்காந்தா அங்க நின்ன ஒருத்தன், யார் யார் கல்யாணத்தையோ அட்டன் பண்ணுறீங்க. உங்களுக்கு ஒரு கல்யாணம் நடக்க மாட்டேங்குதேன்னு சொல்ல, வந்த கோபத்த டீ குடிச்சி ஆத்திகிட்டே நடந்துபோனேன்.
அங்க நியூஸ் பேப்பர் போஸ்டர்லாம் பாத்தா தற்சார்பு அதிகாரிக்கு தடபுடல் வரவேற்புன்னு போட்டுருந்தது. அட என்னடா கொரோனா காலத்துல வேல் கம்புலாம் கொடுத்து வரவேற்குறாங்கன்னு நெனச்சா, அதிகாரி மேல கேஸப் போட்டு உட்டுட்டாங்க. கட்சியில சேர்ந்த முதல் நிகழ்ச்சியிலயே கேஸு வாங்கிட்டாரு…எங்க தலைக்கு தில்லப் பாத்தியான்னு ஒருத்தன் கூவிகிட்டே போறான்.
சரிதான்னும் கிரிக்கெட் விளையாடலாம்னு போனா, அங்க ஒருத்தன் இந்த பேட்டு என்னுது…அதனால் இந்த அணிக்கு (அதான் சார் டீம்) நான்தான் கேப்டன்னு சொல்லுறான். அடப்போடா நியூம் உன் பேட்டும் அவன துரத்திவிட்டோம். அப்புறம் அணிக்கு தலைமைய அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்னு ஆட்டத்தை ஆட ஆரம்பிச்சிட்டோம்.
**கோழியின் கிறுக்கல்கள்**
கண்ணீர் தீர்ந்த பின் கொடுக்கப்படும் ஆறுதல்,
பயிர் இறந்த பின் கிடைக்கும் நீருக்கு சமம்!!
**மயக்குநன்**
போதிய கால அவகாசம் கொடுத்தும் மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் செய்யாமல் இருந்தது யார் தவறு?- எச்.ராஜா கேள்வி.
போதிய கால அவகாசம் கொடுத்தும் தமிழகத்தில் தாமரை மலராமல் போனது யார் தவறு..?!
**ச ப் பா ணி**
தேவைக்குனு கார் வாங்கி
தேவையில்லாம கவர் போத்தி
தெருவில் நிற்கிறது பெரும்பாலான கார்கள்
**Chiranjeevi**
24 arrear பாடங்களில் மாறாத வாழ்க்கை,4 பாடங்கள் எழுத போகும் இறுதி ஆண்டு தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு மாற போவதில்லை…
குடுமி 😍😍😍 https://t.co/Auo9fJGl61
— Half Boil Budhar🍳 (@halfboilbudhar) August 28, 2020
**தர்மஅடி தர்மலிங்கம்**
நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு!
அப்போ! நீங்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதினது சிறப்பு பேருந்துகளை இயக்க தான்!?
**மயக்குநன்**
வெறுப்பது யாராக இருந்தாலும், நேசிப்பது நாமாக இருப்போம்!- ஓபிஎஸ்.
முதல்வர் பதவியைத்தானே சொல்றீங்க..?!
Cute baby bunny 🐰 pic.twitter.com/4e1sZ2XNku
— Aesthetic Nature (@_travel4life) August 24, 2020
**ஜால்ரா காக்கா**
5வதுக்கும் 8வதுக்கும் பரீட்சை வைக்கனும்ன்னு சொல்லிட்டு இருந்தவனுகல என்ஜினீயரிங்கே பாஸ் போட வச்ச… எங்கள் குலசாமி கொரோனோ
**HBD Staru..**
அரியர் பாய்ஸ் ~
ஹலோ மேரேஜ் அஸ்ஸம்ப்ளர், ஏதோ டிகிரி சர்டிஃபிக்கேட் வேணும்னு கேட்டியாமே…
**மயக்குநன்**
புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை!- இந்திய ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையில் தகவல்.
அப்ப… வர்ற நவம்பர் 8-ம் தேதி அன்னிக்கு மறுபடியும் நள்ளிரவு தாக்குதல் இருக்குமோ..?!
**ஜால்ரா காக்கா**
~என்னப்பா அரியர்க்கு பணம் கட்டுனாலே பாஸ்ன்னு சொல்லுறாங்க…அப்போ இந்த வருஷம் நீ டிகிரி வாங்கிருவேலப்பா
அரியர் கைஸ்~ இல்ல ஆத்தா பரீட்சைக்கு சரியா படிக்கலன்னு பணம் கட்டாம விட்டுட்டேன்
மீ~அய்யயோ இந்த அண்டம் தர்த்ரியம் புடிச்ச பயல பாத்தீங்களா ??இதுலயே பாஸ் ஆவலயே இவன் எப்போ பாஸ் ஆக?
— Siluku (@Siluku6) August 28, 2020
**எனக்கொரு டவுட்டு **
இன்னைக்கு கொரானோ கவுண்ட் எவ்ளோ போடுறது.
7000. வேணா வேணா, கொரானோ கட்டுக்குள்ள இருக்குன்னு சொல்லிருக்கோம்.
ஒரு 5980லிருந்து 5999 வரை ஏதாவது ஒரு நம்பர் போட்டுக்கோங்க..!
**லாக் ஆஃப்**�,”