எங்கண்ணே வெள்ளையும் சொள்ளையுமா கெளம்பிட்டீங்கனு பக்கத்து வீட்டு அங்கிள்கிட்ட கேட்டேன். ‘ஆசிர்வாத யாத்திரைக்கு போறேன்ப்பா’ னு சொன்னரு. என்னண்ணே பிஜேபியில சேர்ந்துட்டீங்களானு கேட்டேன். சட்டுனு வேட்டியை மடிச்சுக் கட்டினவரு, ‘என்னய்யா பொசுக்குனு இப்படி கேட்டுப்புட்டே… ஆடி முடிஞ்சி ஆவணி வந்துடுச்சு. முகூர்த்தம் வரிசை கட்டி நிக்குது. ஒவ்வொரு கல்யாணமா போயி ஆசிர்வாதம் பண்ணப் போறேன் அதைத்தான் அப்படி சொன்னேன்’னு விளக்கம் கொடுத்தாரு. அப்புறம்தான் முருகனும் ஆசீர்வாத யாத்திரை போறாருங்குறா விஷயத்தை அங்கிள்கிட்ட சொன்னேன். பதில் பேசாம போயிட்டாரு.
நீங்க அப்டேட் பாருங்க
**ச ப் பா ணி**
நமக்கு நாமே சாம்பிராணி போட்டுக்கொள்வதற்கு பெயர்தான்
“எல்லாம் நன்மைக்கே”
**மயக்குநன்**
அரசியல் லாபத்துக்காக பொய் கூறுகிறார் ராகுல்!- ஜே.பி.நட்டா.
அந்த லாபத்துக்கும் ஜிஎஸ்டி போட்டுட வேண்டியதானே ஜீ..?!
**amudu**
முக்கிய வாக்குறுதிகளைகூட திமுக நிறைவேற்றவில்லை. -ஜி.கே.வாசன்.
அது தான் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தி, வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆரம்பித்து இருக்கிறார்களே.
**balebalu**
36 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை முடியுங்கள் – உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மாதத்துக்கு ஒரு செங்கல் ன்னு கணக்கு வெச்சா கூட இது முடியாதே ?
**amudu**
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ₹25 அதிகரிப்பு.
பிரதமர் மோடி சொன்ன பெரிய திட்டத்தின் டீஸர் தான் இது. மெயின் பிக்சர் பின்னாடி வரும்.
**mohanram.ko**
‘நம்மை பார்த்து சிரிக்கிறார்களே’ என்று கவலைப்படுவதில்லை போட்டோகிராபர்கள்
**ச ப் பா ணி**
கொரொனா இன்னும் ஊருக்குள் இருக்கிறதை உறுதிப்படுத்தவே
ஊரடங்கு குறித்த அறிவிப்பும்
**ஊர்க்காவலன்**
“உரித்தாகட்டும்” என்ற சொல் வெங்காயத்திற்கே மிக சரியாக பொருந்தும்..
**மயக்குநன்**
‘பெகாசஸ்’ விவகாரம் தொடர்பாக வரும் 20-ம் தேதி இணையம் வழியாக எதிர்க்கட்சியினர் ஆலோசனை செய்ய உள்ளோம்!- சீதாராம் யெச்சூரி.
இந்த ஆலோசனையை ஒட்டு கேட்காம இருந்தா சரி..!
**கோழியின் கிறுக்கல்!**
திருமணமாகி ஒரு மாதத்தில் ‘ஒண்ணும் விஷேசம் இல்லையா?’ என்று கேட்பது போல் தான் ‘இன்னும் தேர்தல் வாக்குறதிகளை நிறைவேற்றவில்லை’ என்ற கூற்றும்!!
**-லாக் ஆஃப்**
�,”