நைட்ல எப்படியும் தூங்கறதுக்கு 11 மணிக்கு மேல ஆவும் ஆதித்யா சேனல்ல வடிவேலு காமெடி பாத்துக்கிட்டே மனசு லேசாகி தூங்கிடுவேன்… ஆனா இப்ப எல்லாம் நியூஸ் சேனல் எல்லாமே ஆதித்யா சேனலாயிடுச்சு. நைட் பத்து மணிக்கு மேல தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தையெல்லாம் ஃபுல்லா போடுறாங்க. யப்பா… சினிமா காமெடிய விட அரசியல் காமெடி நல்லாவும் இருக்கு, ரியலிஸ்டிக்காவும் இருக்கு. நீங்களும் அரசியல் ஆதித்யாவுக்கு மாறிடுங்க.
இப்ப அப்டேட் பாருங்க,
**ஜோக்கர்**
வேக்ஸின் கண்டுபிடிச்சதுக்கு ரெஸ்பான்ஸ் எப்பிடி இருக்கு கோபி?
~ பழைய மாதிரியே திரும்பவும் கொரோனா வேகமா பரவிட்டு இருக்குதாம் சுரேஷ்.
**amudu**
‘தோல்வி’ என்பதே என் அகராதியில் கிடையாது!- குஷ்பு.
நடுவில் அந்த பக்கத்தை காணோம்ன்னு சொல்லுங்க.
**கோழியின் கிறுக்கல்!!**
முழுங்கிய பின்னும் தொண்டையில் நிற்கும் மாத்திரையின் உணர்வு போலவே,
உன் நினைவும்!!
**balebalu**
ரயில்வேயின் உள் கட்டமைப்பு வசதிகள் தனியார்மயமாகாது -ரயில்வே அமைச்சர்
உள் கட்டமைப்பை தனியாருக்கு விக்கல . ரயில்வேயை தான் தனியாருக்கு விக்குறோம்
**???????????????????????????????????????????????????? ????????????????**
இந்த தடவையும் ஏமாத்தி விட மாட்டாங்க எனவும்,
இந்த தடவையும் ஏமாந்து விடக்கூடாது எனவும்..
நினைக்க வைப்பது!
#தேர்தலும்காதலும்
**balebalu**
ஆயிரம் தாண்டியாச்சு மாமா !
தேர்தல் பணமா மாப்ள ?
கொரோனா எண்ணிக்கை மாமா
**ச ப் பா ணி**
லோன் படிவத்தில எந்த பாராவையும் படிக்காம
I agree all terms and conditions க்கு டிக் அடிக்கிறோமே அந்த மனசுதான் சார் கடவுள்
**கோழியின் கிறுக்கல்!!**
திரும்பவும் Amazon primeம் Netflixம் recharge செய்யணும் போலவே!?
#Corona
**-லாக் ஆப்**
�,”