தங்க விலை 600 ரூபா குறைஞ்சிருக்கு வரியா ஒரு அஞ்சு பவுன் வாங்கிட்டு வந்துடுவோம்னு பக்கத்து வீட்டு அக்கா கேட்டாங்க.சித்திரை மாசம் அவங்க மகனுக்கு கல்யாணம் வச்சிருக்காங்க. அதனாலதான் இனிமேல் குறையுமோ என்னமோனு அவங்க அவசரப்படுறாங்க. நகை வாங்க வச்சிருக்கிற பணத்துக்கு ஆவணம் இருக்கானு கேட்டேன். அதென்னப்பா ஆவணம்னு கேட்டாங்க. தேர்தல் ஆணையத்தோட விதிகளை எல்லாம் எடுத்து சொன்னேன். அடப் படுபாவியளா… உங்க வீட்ல எப்படிடா கல்யாணம் நடக்கும்னு பாவம் சாபம் விட்டுட்டு வீட்டுலயே இருக்காங்க.
நீங்க அப்டேட் பாருங்க
**பர்வீன் யூனுஸ்**
கருத்துக்கணிப்பில் மூன்று நான்கு சதவிகிதம் தான் ஆதரவு என வந்தும் பிரச்சாரத்தை தொடரும் அரசியல் கட்சி தலைவர்களே ஆக சிறந்த தன்னம்பிக்கையாளர்கள்.
**நாகராஜ சோழன் MA.MLA**
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பாஜக வெற்றியைப் பாதிக்காது!- எல்.முருகன்.
எப்பா, முருகண்ணன் நல்லா காமெடி பன்றாருப்பா…
**விடியலைதேடி**
“quarter”க்கு டிமாண்ட் இல்லாத இங்கு,
“Water”க்கு மட்டும் எப்போதும் டிமாண்ட் உள்ளது.
**balebalu**
ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி சேமிக்க ‘பாஸ்டேக்’ முறை உதவும் -மத்திய அமைச்சர்
தேவையில்லாத இடங்களில் சுங்க சாவடிகளை நீக்கினால் மக்கள் சில நூறு களை சேமிப்பாங்களே ? அதை யோசிச்சீங்களா ?
**நெல்லை அண்ணாச்சி**
“எவரிடமும் ATM PIN கொடுத்து ஏமாறாதீர்கள்”ன்னு பேங்க்’லருந்து SMS அனுப்பிருக்கான்..
அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்.. நீ எவனுக்கும் கடன் குடுத்து ஏமாறாத..
**???????????????????????????????????????????????????? ????????????????**
வாழ்க்கையில் பொறாமை பட வைப்பவர்கள் இரண்டு பேர்..
மனைவி எவ்வளவோ அடிச்சாலும் தாங்குறவன்,
அலாரம் எவ்வளவோ அடிச்சாலும் தூங்குறவன்.
**ச ப் பா ணி**
நெட்டு மட்டும் 4G,4G+ காண்பிக்குது.ஆனா ஒரு 15kb இமெஜ்க்கு இந்த சுத்து சுத்துது
#ஏர்டெல் பரிதாபங்கள்
**தர்மஅடி தர்மலிங்கம்**
நவீன உலகில் ‘இயந்திரங்கள்’ வலுப்பெற்று ‘மனிதன்’ வெகு விரைவில் பழுதடைகிறான்!
**mohanram.ko**
உலக அளவிலான பணக்காரர்களின் பட்டியலில் 8-வது இடத்தில் முகேஷ் அம்பானி
அய்யா, முதலிடம் வரணும்னு மறுபடியும் கேஸ் விலையை ஏத்திடாதீங்கைய்யா
**பாலசுப்ரமணி**
உன் சமையல் அறையில்
நான் கேஸ் அடுப்பா ?
விறகு அடுப்பா ?
#gaspricehike
**மயக்குநன்**
சோனியாவுக்கு ராகுல் மீது கவலை, ஸ்டாலினுக்கு உதயநிதி மீது கவலை!- அமித்ஷா.
ஓபிஎஸ்ஸுக்கு ரவீந்திரநாத் மீது கவலை, ஜெயக்குமாருக்கு ஜெயவர்த்தன் மீது கவலை, ராமதாஸுக்கு அன்புமணி மீது கவலை… இதையும் சேர்த்து சொல்லுங்க ஜீ..!
**கோழியின் கிறுக்கல்!!**
ஒவ்வொருக்காகவும் வளைந்துக் கொண்டிருந்தால்,
நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பது கூட மறந்துப் போகும்!!
**-லாக் ஆஃப்**
�,”