bகுடும்ப சட்ட ஒழுங்கு: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

பக்கத்து வீட்ல ஒரு பையன் பத்தாவது படிக்கிறான். அவனோட அக்கா பிளஸ் டூ படிக்கிறா. டெய்லி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறாங்க. பத்தாவது பையனுக்கு எக்சாம் கிடையாதாம். ஆனா பிளஸ்டு பொண்ணுக்கு பப்ளிக் எக்ஸாம் உண்டு…. எப்போனு தெரியலை. இந்த பிரச்சினைதான் ரெண்டு பேருக்கும் டெய்லி சண்டை வர்ற காரணம். குடும்ப சட்டம் ஒழுங்கை கட்டுக்குள்ள வைக்க முடியாம அந்த பயபுள்ளைகளோட அப்பா என்கிட்ட புலம்புறாரு.

எப்படியெல்லாம் நடக்குது பாருங்க. நீங்க அப்டேட் பாருங்க

**ஜோக்கர்…**

கொஞ்சம் கூட யோசிக்காம “கும்பமேளாக்கு” பெர்மிஷன் குடுக்க வேண்டியது,

அப்புறம் கும்பமேளா போனவன பூராம் “குவாரண்டைன்ல” இருக்கணும்னு ஆர்டர் போட வேண்டியது..

**கோழியின் கிறுக்கல்!!**

தூங்கி எழுந்து குளிக்கப் போனால், அது குளிர் காலம்!

தூங்கி எழும் போதே குளிந்திருந்தால் அது கோடை காலம்!!

**மயக்குநன்**

கடந்த ஆண்டைப் போல கொரோனாவை ஒழிப்போம்!- பிரதமர் மோடி.

கடந்த ஆண்டே ஒழிச்சிருந்தா… இப்ப எப்படி வந்திருக்கும்..?!

**உள்ளூராட்டக்காரன்**

லாக்டவுன் அறிவிப்பெல்லாம் பார்த்துட்டு சன் டிவி வச்சா, பிச்சைக்காரன் படம் ஓடுது

ஆஹா, எதுவும் குறியீடா?

**பர்வீன் யூனுஸ்**

இளையராஜா பாடல்களுக்கு போடவே முடியாது.. இரவு ஊரடங்கு.

**ரஹீம் கஸ்ஸாலி**

காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒரு சுற்றுலா அரசியல்வாதி!- அமித்ஷா #

அவரை சொல்ற மாதிரி என்னை சொல்றாரோ?!- மோடி குழப்பம்

**நாகப்பட்டினத்தான்!**

முகக் கவசம் இல்லாத நபருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தால்; தடுப்பூசிகள் இல்லாத அரசாங்கத்திற்கு எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும்!??Thinking face

#ResignModi

**ரமேஷ் ஏழுமலை**

அண்ணே கும்பமேளானா என்ன அர்த்தம்னு இன்னைக்குதாணே தெரிஞ்சிட்டேன்…,

என்ன அர்த்தம்டா தெரிஞ்சிட்ட???

கொரோனாவால கும்பலா மேல போறதுக்குதா கும்பமேளாணே தெரிஞ்சிட்டேணே.

**ரஹீம் கஸ்ஸாலி**

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில்தான் உள்ளது -எல். முருகன் பாஜக!

தப்பு… கொரோனா கட்டுப்பாட்டில்தான் தமிழகம் உள்ளது.

**ச ப் பா ணி**

என் உயிர் உன்னை நினைத்து

அலைமோதிக் கொண்டிருக்கிறது..

ஆக்ஸிஜன் சிலிண்டராய் வா

**மயக்குநன்**

நீரவ் மோடியை இந்தியாவுக்கு அனுப்ப இங்கிலாந்து அரசு அனுமதி!

மல்லையாவுக்கு முன்னாலேயா… பின்னாலேயா..?!

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share