அத்தியாவசியமா தேவை இருந்தா மட்டுமே வெளிய வரணும்னு இன்னிக்கு முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்காரு. ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு முன்னாடி எல்லாரும் வாங்க எல்லாரும் வாங்கனு கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு பூராவும் இவர் உட்பட எல்லா அரசியல்வாதிகளும் சுத்தினாங்க. . அதாவது அவங்களுக்கு தேவைன்னா அலைகடலென வெளிய வரணும். இப்ப அத்தியாவசிய தேவைன்னா மட்டும் வெளிய வரணும். என்ன சார் உங்க சட்டம், என்ன சார் உங்க சட்டம். தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறீங்களே சார்.
நீங்க அப்டேட் பாருங்க
**amudu**
எமோஜிகள் மட்டும் இல்லையென்றால், நமக்கு வந்த பல மெசேஜ்களுக்கு, பதில் அனுப்பாமலே இருந்திருப்போம்.
**balebalu**
ஃபர்ஸ்ட் டோஸ் முடிச்சாச்சு ! இனிமே செகண்ட் டோஸ் தான் பாக்கி !
வாக்சின் ஆ மாப்ள ?
நான் காப்பியை சொன்னேன் மாமா
**தர்மஅடி தர்மலிங்கம்**
மழைக்கு கூட ‘பள்ளிக்கூடம்’ பக்கம் ஒதுங்காதவங்கெல்லாம் யாருன்னு நெனச்ச..?!
எலெக்சன்ல முதல் ஆளாக ‘பள்ளிக்கூடம்’ போய் ஓட்டு போட்டு வந்த நம்ம கிராமத்து மக்கள் தான்.
**மயக்குநன்**
தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும்!- மு.க.ஸ்டாலின்.
கொரோனா நேரமா இருக்கிறதால ‘ஆல்பாஸ்’ கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கீங்களோ தலைவரே..?
**நாகராஜ சோழன் MA.MLA**
”நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி, பின்னரே ஏற்றுமதி பற்றி அரசு சிந்திக்கவேண்டும்” -சோனியா காந்தி.
இருக்கு…இருக்கு… இந்தியாவின் எதிர்கட்சி உயிரோட தான் இருக்கு…
**balebalu**
ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?
பின்ன என்ன ? ‘தடுப்பூசி திருவிழா’ ன்னு சொல்லுறாங்களே ? ஊசி போட்டா பலூன் , ஜவ்வு மிட்டாய் லாம் கொடுப்பாங்களா ன்னு கேக்குறாம்ப்பா
**ℍ???????????????????????????????????????????????? ℝ????????????**
வெயிலால வேர்க்குறதை விட ஏஸியால வர்ற கரண்ட் பில்லை நினைச்சாதான் இன்னும் அதிகமா வேர்க்குது.
#கோடை
**தர்மஅடி தர்மலிங்கம்**
“கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை!” – ஹர்ஷ் வர்தன்!
கொரோனா பரவலுக்கும் தான் .தட்டுப்பாடு இல்லைங்களே.
**PrabuG**
பரப்புரை பரப்புரைன்னு சொன்னாங்க. அதெல்லாம் கொரோனா பரப்பும் உரைன்னு அப்போப் புரியலை, இப்போப் புரியுது…
**மயக்குநன்**
50 சதவீத இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் இயங்கும்!- அரசு அறிவிப்பு.
குடிச்ச பிறகு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியும்போது 100 சதவீதமா மாறிடுமே பாஸ்..!
**துயிலன்**
தேர்தல் பொதுக் கூட்டங்களால் தான் கொரோனா பரவல் அதிகரித்தது – கிருஷ்ணசாமி
மகாராஷ்டிராவுல தேர்தலே நடக்கலயே மேன்.
**-லாக் ஆஃப்**
�,”