jகுட் மார்னிங், குட் நைட்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர்லாம் நாங்க சொல்றபடி கேட்டு நடந்துக்கணும்னு அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கு. அதை எதிர்த்து அவங்கள்லாம் கேஸ் போட்டிருக்காங்க. இந்த கேஸ்ல முக்கியமான பாயின்ட் இருக்கு. வாட்ஸ் அப் க்ரூப்ல, குட்மார்னிங், குட் நைட் மட்டுமே போஸ்ட் பண்றவங்களை கண்டுபிடிச்சு அவங்களுக்கு கடுமையான தண்டனை வாங்கிக் கொடுங்க மோடிஜி… தாங்க முடியலை.

நீங்க அப்டேட் பாருங்க

**amudu**

மத்திய அரசின் 7-ம் ஆண்டு நிறைவையெட்டி ஒரு லட்சம் கிராமங்களில் பாஜக தொண்டர்கள் கரோனா சேவை.

அப்போ.. ஊரெல்லாம் ஒரே கோமிய வாசமா இருக்குமா.

**மயக்குநன்**

மாட்டுப் பாலுக்குப் பதில், சோயா பால் உள்ளிட்ட சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும்!- ‘அமுல்’ நிறுவனத்துக்கு ‘பீட்டா’ கடிதம்.

ஆகா… பாலுக்கே பால் ஊத்தப் பார்க்கிற மாதிரி தெரியுதே அண்ணே..?!

**நாகராஜசோழன்.MA.MLA.**

மத்திய அரசின் டிஜிட்டல் மீடியா விதிமுறைகளுக்கு இணங்கியது டிவிட்டர்

“டிக் டாக் ஆப்”பை தடை பண்ணியதெல்லாம் இன்னும் மறந்திருக்க மாட்டாங்க தானே….

கொஞ்சம் பயம் இருக்கும் தானே…

**balebalu**

மெடிக்கல் ஷாப் , பால் பூத் ன்னு எல்லா இடத்திலும் மளிகை சாமான்கள், ஸ்னாக்ஸ் விக்க ஆரம்பிச்சாச்சு ! இன்னும் தடுப்பூசி மையம் தான் பாக்கி Grinning face

#lockdown

**ச ப் பா ணி**

பல பேருந்து பயணங்களை சகித்துக்கொண்டு செல்ல வைத்திருப்பது ராஜாவின் பாடல்களே

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?**

இளையராஜா இசையை கேட்பதை நிறுத்தும் வரை, முன்னாள் காதலியின் நினைவுகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.

**தர்மஅடி தர்மலிங்கம்**

பால் விலை குறைப்பால் ரூ.270 கோடி இழப்பு – பால் வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்

அப்போ.. ரூ.270 கோடி ‘பாழா’ போய்டுச்சுன்னு சொல்றீங்களோ.??

**சரவணன். ℳ**

ஒரு சீரியல்ல தாலி கட்டட்டுமா, இல்ல விஷத்தை குடிக்கட்டுமா ன்னு கணவன் மனைவி கிட்ட கேட்கற மாதிரி ஒரு சீன்…

அடேய், ரெண்டுமே ஒன்னு தான்டா…!

**amudu**

ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. -ஸ்டாலின்.

கொரோனா தன் பரவலை நீட்டித்துக் கொண்டே போகுதே. வேற என்ன தான் செய்ய.

**A.P.P.**

இன்னும் மூணுநாள்ல வீட்டுக்கார அம்மா வாடகை கேட்கபாங்கறத நினைக்கும்போது…

மாஸ்க் இல்லாம மகாமக கூட்டத்துக்குள்ள போனமாதிரி மனசு படபடன்னு இருக்கு.

**மயக்குநன்**

சசிகலாவை வைத்து ஏற்படுத்துகின்ற குழப்பத்துக்கு ஒரு அதிமுக தொண்டர் கூட செவி சாய்க்க மாட்டார்கள்!- கே.பி.முனுசாமி.

அதிமுக தலைவர்கள் மீதுதானே நமக்கு சந்தேகமே..?!

**சரவணன். ℳ**

மாநில அரசு மட்டும் மத்திய அரசோடு இணக்கமான போக்கை கடைபிடித்து மாநிலத்துக்கு பெரும் நன்மைகளை கொண்டுவரணுமாம்…

ஆனா இவங்க மட்டும் மாநில அரசுகளை எல்லா விதத்திலும் புறக்கணிச்சுட்டு ஜிஎஸ்டி தொகையை மட்டும் வசூல் பண்ணிக்குவாங்களாம்…

**மயக்குநன்**

ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடைய, சசிகலா ஒதுங்கி அமைதியாக இருப்பது நல்லது!- கே.பி.முனுசாமி.

ஏன்… ‘தர்மயுத்தம்’ செய்யற உரிமையை எல்லாம் ஓபிஎஸ்ஸுக்கு மட்டும்தான் வழங்கி இருக்கீங்களா..?!

**கோழியின் கிறுக்கல்!**

அன்பு, ஒரு அவசரக் குடுக்கை

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share