அண்ணனுக்கு அண்ணன்தானே ஆதரவு: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

வீடியோவுல பாத்தேன்யா, வீடியோன்னவுடனேயே தப்பா நினைக்காதீங்க, அவரு பேட்டி கொடுத்த வீடியோவை பாத்தேன். எவ்வளவோ நல்ல விசயம் பேசியிருக்காருய்யா… ஆனா அந்த விசயம்தான் மீடியாவுல ரொம்ப வேகமாக போயிக்கிட்டிருக்கு. இதைப் பத்தி டீ கடையில நம்ம ஃபிரண்டுக்கிட்ட நொந்து போய் சொல்லிக்கிட்டிருந்தேன். அவன் ஒரே வார்த்தையில சொல்லிட்டுப் போயிட்டான், ‘விடுப்பா அண்ணனுக்கு அண்ணன் தானே ஆதரவு தரணும்’னு அசால்ட்டா சொல்லிட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டான்.

நீங்க அப்டேட் பாருங்க

**ஆனந்த்**

உங்கள் வெற்றி தோல்வியை முடிவு செய்வது குருப்பெயர்ச்சியோ சனிப்பெயர்ச்சியோ அல்ல. உங்கள் முயற்சியும், பயிற்சியும் தான்…

**amudu**

“கத்தியை எடுத்தவன் கத்தியால் அழிவான்” என்பதன் அப்டேட் வெர்ஷன் தான் “சோஷியல் மீடியாவிற்கு வந்தவங்க, சோஷியல் மீடியாவால் அழிவாங்க” என்பது.

**நாகராஜசோழன்.MA.MLA.**

தனிப்பட்ட முறையில் நடந்த ஒன்றை அறைக்குள் கேமரா வைத்து பதிவு செய்வது சமூக குற்றம்.-சீமான்

என்னது…. விஜயலட்சுமி அக்கா கமிஷ்னர் ஆபீஸ்ல நாளைக்கு பிரஸ் மீட் குடுக்க போறாங்கள???

**ℳ????????இதயவன்**

எந்தவொரு சவாலையும் சந்திக்க தயார் ~ பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

உங்க ஆட்சி வந்ததிலிருந்து மக்களும் இதை தான் சொல்லிட்டு இருக்காங்க?!

**Mannar & company™**

கேட்டு வாங்கினா அது சீர்வரிசை,நாமளே எடுத்துகிட்டா அது கைவரிசை! -வரதட்சணை

**ச ப் பா ணி**

சுடுகாட்டு சுவற்றில்

ஒட்டியிருந்தது

“தலைவர் அழைக்கிறார் வாருங்கள் என்று”

**மயக்குநன்**

சமஸ்கிருதம் அறிவை வளர்க்க உதவுகிறது!- மோடி.

சும்மா சொல்லாதீங்க ஜீ… தாடியைத்தானே வளர்க்க உதவுது..?!

**ச ப் பா ணி**

சரக்கடிச்சவனும்,

சென்ட் அடிச்சவனும் அடிக்கடி கேட்பது

“வாசம் வருதானு தான்””!!

**Dr. M. A. N. Loganathan**

பசங்களுக்கு க்ளாஸ்ரூமே மறந்து போச்சு சார் ..வேற வேற க்ளாஸ்ல உட்கார்ந்திருக்கானுங்க..

இது உங்க ஸ்கூலே இல்ல டீச்சர்..

மாறி வந்துட்டீங்க

செப்1- பள்ளிகள் திறப்பு

**கோழியின் கிறுக்கல்!!**

இன்பச் சுற்றுலா முடிந்து திரும்பும் குழந்தையின் மனநிலையிலேயே திங்களன்று வேலைக்கு தயாராகிறது நம் மனம்!!

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share