அக்காக்கள் சங்கம்: அப்டேட் குமாரு

entertainment

பக்கத்து வீட்டு சின்னப்புள்ளை என்கிட்ட, ‘அண்ணே முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு லட்டர் போடணும், அவரோட அட்ரஸ் வேணும்’னு கேட்டுச்சு. ஏம்மா அப்படி என்ன விஷயம்னு கேட்டேன். இல்ல…. நாங்க எங்க ஊர்ல அக்காக்கள் சங்கம்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சிருக்கோம். நாங்கள்லாம் 9 ஆவது, 10 ஆவது படிக்கிறோம். எங்களுக்கு ஸ்கூலை ஓப்பன் பண்றதா சொல்லிட்டாங்க. ஆனா எங்க தம்பிகளுக்கு இன்னும் ஸ்கூல் ஓப்பன் பண்ணல. என் தம்பி என்னை பார்த்து சிரிக்கிறான். அதனால அக்காக்கள் சங்கம் சார்பா, ‘எங்க தம்பிகளுக்கும் ஸ்கூல் தெறக்கணும்னு முதல்வர் கிட்ட சொல்லணும். அதனான்’னு காரணம் சொன்னுச்சு.

நான் அப்படியே ஜெர்க் ஆயிட்டேன்… நீங்க அப்டேட் பாருங்க

**கோழியின் கிறுக்கல்!!**

மற்றவருக்கு புரிய வைக்க முயற்சித்தே நம்மின் பாதி ஆயுள் போய் விடுகிறது!!

பிறகு எப்பொழுது வாழ்வதாம்!?

**ச ப் பா ணி**

எப்போது வேண்டுமானலும் செய்து முடிக்கக்கூடிய வேலையை.. எப்போதும் நாம் செய்து முடிப்பதில்லை

**கடைநிலை ஊழியன்**

என்னணே எலக்சன்ல தோத்துட்டு இவ்ளோ சந்தோசமா இருக்கீங்க..

அட பைத்தியக்கார.. தோத்தா என்னடா.. நா தான் ஆளுநர் போஸ்ட் வாங்கிருவேனே..

**balebalu**

துடைப்ப சைஸ் குறைய குறைய ,

தொப்பை சைஸ் குறையும்

**S.K.Soundhararajan**

ஒரு குடும்பத்தின் பெயரால் இந்தியாவின் தலையெழுத்து தீர்மானிக்கப்படாது!- பிரதமர் மோடி #

ஒரே நாடு,ஒரே வரி மாதிரி ஒரே குடும்பம் இருக்காது போல.

**கடைநிலை ஊழியன்**

“அதிமுகவின் குறைகளை காண்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறது திமுக” – வானதி ஸ்ரீனிவாசன் #

இதை வேடிக்கை பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுகிறது பாஜக !!

**மயக்குநன்**

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிப்பு!- செய்தி.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கூட போட்டி போடுற மாதிரி தெரியுதே..?!

**balebalu**

ஒரே நேரத்தில் காலேஜும் திறக்குறாங்க தியேட்டரும் திறக்குறாங்க Face with tongue

-TNLockdown

**Mannar & company**

என்னடா.. ரோடெல்லாம் மேடு பள்ளம் இல்லாம நல்லா அகலமா நல்லாருக்கேன்னு நினைக்கிறிங்கன்னா அடுத்த கொஞ்ச நேரத்துல டோல்கேட் வரப்போகுதுன்னு அர்த்தம்!

-சுங்கச்சாவடி

**PrabuG**

தமிழ்நாட்டுல டாக்டர்கள் நிறைய உருவாகனும்னு நீட்டை எதிர்த்து ஒரு பக்கம் போராடினா,

டாக்டர்களை எல்லாம் சைக்கோவா காட்ட தமிழ் சினிமா ஒரு பக்கம் போராடிகிட்டு இருக்கு..

**ச ப் பா ணி**

ஒரே வரியில் அமைதி,மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவற்றை விளக்க வேண்டும் எனும் போட்டியில் 200 பேர் கலந்து கொண்டனர். ஒருவர் மட்டும் அதில் வெற்றி பெற்றார்..அவர் எழுதிய வாசகம்

“என் மனைவி தூங்கிக் கொண்டிருக்கிறாள்”

**மயக்குநன்**

தமிழகம் முழுவதும் கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தன்மை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவு!- செய்தி.

இபிஎஸ் ~ மொத்தத்தில்… நம்ம கட்சிக்கு சமாதி கட்ட பிளான் பண்ணிட்ட மாதிரி தெரியுதே..!

**லாக் ஆஃப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *