இனிமே கோயில்ல மொட்டையடிக்க கட்டணம் வசூலிக்கமாட்டோம்னு சட்டமன்றத்துல அறிவிச்சிருக்காங்களாமே அதுதான் இன்னிக்கு டீ கடையில டாப்பிக். டீ மாஸ்டர் அந்நியன் மாதிரி முடிய விலக்கிவிட்டு, ’ ஏன்ப்பா… வாராவாரம் பண்ற ஷேவிங், மாசாமாசம் பண்ற கட்டிங் செலவே அதிகமாகியிட்டிருக்குது. அதுக்கு ஒரு வழி பண்ண மாட்டாங்களானு நினைச்சேன். நல்ல வேளை இனி மூனு மாசத்துக்கு ஒரு தடவை கோயில்ல போய் மொட்டைய போட்டுட்டலாம்’னு தலைய தடவிக்கிட்டே சொல்றாரு.
நீங்க அப்டேட் பாருங்க
**amudu**
மோடி அரசைப் பார்த்து தீவிரவாதிகள் பயப்படுகிறார்கள். -ராஜ்நாத் சிங்.
பெட்ரோல் விலை எப்போ ஏத்துவாரோ, சிலிண்டர் விலையை எப்போ ஏத்துவாரோன்னு, பொதுமக்களும் ரொம்ப பயந்து போய் தான் இருக்காங்கப்பா.
**செங்காந்தள்**
அமெரிக்காவில் வேப்பங்குச்சியின் விலை ரூ.1800..
கசப்பான செய்தி
**கடைநிலை ஊழியன்**
சிட்டுக்குருவி வாழ்வை கெடுப்பது – செல்போன் டவர் !!
மனிதன் வாழ்க்கையை கெடுப்பது – செல்போன் !!
**மித்ரன்**
மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்; நிச்சயம் கேஸ் விலை குறையும் ~ அண்ணாமலை
7 வருசமா பொறுமையா தான் இருக்கோம்.. இன்னும் சிலிண்டர் விலை குறைஞ்ச பாடில்ல போவியா..?!
**ℳ????????-இதயவன்**
கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டுகொள்ள வைக்கும் யுக்தி என்று அறிக..!!
**சரவணன். ℳ**
மருத்துவர் இல்லை, உபகரணங்களும் இல்லை -சென்னையில் ஸ்பெஷல் மருத்துவ முகாம் நடத்திய பாஜகவினர்
அவங்களோட ஸ்பெஷாலிட்டியே அதானே…!
**ஜோக்கர்..**
தீபாவளி, ஆயுதபூஜை எல்லாத்தையும் வீட்லயே கொண்டாட சொல்லிட்டாங்க..
ஆட்டுக்குட்டி~ இந்த திமுக அரச கலைக்காம விட மாட்டேன்.
சொன்னது ஒன்றிய அரசு பாஜக வாம்…
த்தா..???????????????? pic.twitter.com/SUhl9hhaS6
— PrabuG (@HariprabuGuru) September 4, 2021
**PrabuG**
உங்க ஊர்லதான்டா அதுக்கு பேரு தேர்தல் ஆணையம்.
எங்க ஊர்ல அதுக்கு பேரு தேர்தல் நடத்த அவகாசம் கேட்குற ஆணையம்…
**சரவணன். ℳ**
ஒரே நாடு ஒரே திட்டம் ன்னு சொல்ல வேண்டியது.. கர்நாடகவுல விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிப்பாங்களாம்.. தமிழ்நாட்டில் மட்டும் நடத்தணுமாம்…
**மயக்குநன்**
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறவில்லை!- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அதுக்குப்பதிலாதான்… அடிக்கடி பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏத்தி, மக்கள் மீது அரசே தாக்குதல் நடத்திட்டு இருக்கே..?
**கோழியின் கிறுக்கல்!**
‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லை’ என்று உண்மையில் வாழ்பவர்கள் குடும்பத் தலைவர்களே!!
**-லாக் ஆஃப்**
�,”