{அன்னபூரணிக்கு டஃப் பைட் மனுஷ்: அப்டேட் குமாரு

entertainment

ரெண்டு மூணு நாளா சோஷியல் மீடியாவுல அன்னபூரணி அம்மாதான் ஹாட் டாபிக். ஆனா அதுக்கு டஃப் பைட் கொடுக்குற அளவுக்கு இலக்கிய அன்னபூரணனான நம்ம கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஹாட் டாப்பிக்கா ஆகிட்டிருக்காரு. மனுஷோட அடுத்த கவிதைப் புத்தகத்தோட தலைப்பு என்னாங்குறதுதான் அந்த விவாதம். மனுஷையும் சேர்த்து இப்ப வரைக்கும் மூணு பேருக்குதான் அந்த தலைப்பு தெரியுமாம். எந்த நேரமும் ரிலீஸ் பண்ணுவார்னு ஃபேஸ்புக்லயே ஒரு கூட்டம் காத்துக்கெடக்கு. இன்னும் விசாரணை கமிஷன் வைக்க வேண்டியதுதான் பாக்கி….

நீங்க அப்டேட் பாருங்க

**மயக்குநன்**

அமைச்சர், துணை முதல்வர் பதவிகளை நான் விரும்பவில்லை!- உதயநிதி ஸ்டாலின்.

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ங்கிற குறளை ஃபாலோ பண்ணுறாரு போல..?!

**balebalu**

ஸ்மார்ட் போனும் ஸ்மார்ட் சிட்டி யும் ஒண்ணு 

எது இருக்கோ இல்லையோ செல்ஃபி ஸ்பாட் நிச்சயம் இருக்கும்

**சரவணன். 𝓜**

அன்னபூரணியாக திவ்யதரிசனம் தருவாய் என்று நான் கனவில் மிதந்து கொண்டிருக்கநீயோ ராஜேந்திர பாலாஜியை போல ஓடி ஒளிந்து காவல்துறையை போல ஏமாற்றிக் கொண்டிருக்கிறாய்..!

**சித்ரா தேவி**

அரை மணி நேரமா தக்காளி வெங்காயத்த வதக்கிட்டு இருக்கேன். வதங்கவே மாட்டேங்கு ஏன் அண்ணி.

ஆத்தா அன்னபூரணி… இப்பவாவது கேட்டியே. ஸ்டவ்வ பத்த வச்சிட்டு கிண்டும்மா என் செல்லம்.

**குருநாதா**

ஆயிரமோ, ஐயாயிரமோஒரே மாதிரி Moneyயோசைசமத்துவம் கற்பிக்கும்’ATM’.

**balebalu**

டிவி பஞ்சாயத்துக்கு வர்றவங்க முகத்தை நல்லா பார்த்து வெச்சுக்கணும் . 10 வருஷம் கழிச்சு கைலாசா தீவு மாதிரி ஏதாவது தீவின் அதிபரா மாற வாய்ப்பிருக்கு 

**Mannar & company™**

கம்பளியையும் விலகாம பார்த்துக்கணும், ஃபேனும் ஓடணும், கொசுவையும் அடிச்சுக்கணும் இதுக்கு நடுவுல அப்பப்ப மொபைலையும் நோண்டணும்.. இதுக்குமேல மனுசன் நல்லா தூங்கி எழுந்திருக்கணும்னா எப்படி!?

**சரவணன். 𝓜**

பயம் இருப்பவன் கல்யாணம் செய்ய முடியாது .

கல்யாணம் ஆனவனுக்கு பயம் இருக்காது .

**Mannar & company™**

வீட்டம்மா காய்கறி அறிஞ்சிகிட்டே அம்மா வீட்டுக்கு போன் போட்டு அங்க நடக்குறதை கேட்டு தெரிஞ்சிக்கிறதுதான் “தகவல் அறியும் சட்டம்”

**balebalu**

விட்டா ‘முப்பது நாளில் சாமியாரா( ரிணி)வது எப்படி’ ன்னு கோர்ஸ் வந்தாலும் வந்துடும்

**மயக்குநன்**

சுகாதாரத்தில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகத்துக்கு 2-ம் இடம்!- செய்தி.

மாஸ் காட்டுறாரே மா.சு…!

**-லாக் ஆஃப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *