இப்பதான் ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிருக்கே அதுக்குள்ள உனக்கு அரையாண்டு லீவு விடுறாங்களே தம்பினு பக்கத்து வீட்டு பையன் கிட்ட கேட்டேன். அதுக்கு அவன், ‘ஏன் அங்கிள் நீங்க வேற வயிறு எரியுறீங்க. இந்த அரையாண்டு லீவுல நான் எல்லா கோயிலுக்கும் போயி ஓமிக்ரான் பேர்ல அர்ச்சனை பண்ணி இந்த அரையாண்டு லீவு அப்படியே கன்டினியூ ஆகணும்’ னு வேண்டிக்கப் போறேன்’னு அசால்ட்டா சொல்லிட்டுப் போறான்…
நீங்க அப்டேட் பாருங்க
**கோழியின் கிறுக்கல்!!**
நான் ஒண்ணு கேட்பேன், உண்மையை சொல்லணும்?’ என்று மனைவி ஆரம்பிக்கும் பொழுதே,
ஆயிரம் பொய்களை சிந்திக்க ஆரம்பித்து விடுகிறது மூளை!!
**Mannar & company™**
பல நாட்களாக விலை ஏறாத பெட்ரோல், டீசல் செய்தியும்,
பல நாட்களாக அம்மா வீட்டுக்குப் போகாத மனைவியும் பீதியை கிளப்புகிறார்கள்!
**மயக்குநன்**
உத்தரபிரதேசத்தின் மகள்கள் முந்தைய அரசுகளை மீண்டும் அதிகாரத்துக்கு வர விடமாட்டோம் என்று முடிவு செய்துள்ளனர்!- பிரதமர் மோடி.
அப்புறம் எதுக்கு வீணா தேர்தல் நடத்திக்கிட்டு… தேர்தல் செலவாவது மிச்சமாகும்ல..?!
**ச ப் பா ணி**
நான் ஒன்னு கேட்பேன் தப்பா நினைக்கக் கூடாது”
அதிகம் பீதியடைய வைத்த கேள்வி
**balebalu**
கட்ட பையும் காலண்டரும் ஒண்ணு
அடிச்சு புடிச்சு வாங்குவோம் ஆனா பாதி நேரம் வீட்டில் சும்மாத்தான் கிடக்கும்
**மயக்குநன்**
நிதிக்காக மத்திய அரசிடம் கொத்தடிமைபோல கையேந்தும் நிலைதான் உள்ளது!- முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்னும் விடியலைனு சொல்றீங்களா தலைவரே..?!
**கோழியின் கிறுக்கல்!!**
‘என்னை கேட்காமல் அவர் எதுவுமே செய்ய மாட்டார்’ என்று மனைவி கூறுவது,
‘கேட்காமல் செய்கிற அளவுக்கு அவருக்கு தைரியம் இருக்கா?’ என்றே பொருள்படும்!!
**balebalu**
ஒமைக்ரானுக்கு எதிரான பேராயுதம் பூஸ்டர் தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு
“Booster is the secret of my energy” ன்னு அடுத்தது விளம்பரம் வருமோ
**ச ப் பா ணி**
இன்னும் கொஞ்சம் இருந்தா தான் என்ன என்பது
குளிக்கும் போது தீர்ந்துவிடும் சுடுதண்ணிதான்..
**PrabuG**
ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது – செய்தி.
ஸ்கூலுக்கு எப்ப லீவ் விடுவாங்கன்னு கேட்டது எவன்டா..
**Mannar & company**
உண்மையாக சொல்லப் போனால் ‘True’ caller என்பவர் அம்மாக்கள்தான்!
– லாக் ஆப்**
�,”