ஊரடங்கோட ரொமான்டிக் முகம்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

நான் சின்னப் புள்ளையில காஷ்மீர்லதான் ஊரடங்கு உத்தரவுனு நியூஸ்ல கேட்டிருக்கேன், இப்ப நம்மூர்லயே அடிக்கடி போடுறாங்களேனு தாத்தா அலுத்துகிட்டாரு. ஏன் தாத்தா நீங்க எங்க போகப் போறீங்க இப்ப உங்களுக்கு என்ன கஷ்டம்னு கேட்டேன். இல்லடா பாட்டிக்கு வீடியோ கால் பேசத் தெரியாது. அவ பாட்டுக்கு ஊருக்கு போயிட்டா… இப்ப அவளை எப்படி பாக்காம இருக்குறதுனு கேட்குறாரு. ஊரடங்கோட இன்னொரு முகம் எவ்ளோ ரொமான்ட்டிக்கா இருக்கு

நீங்க அப்டேட் பாருங்க

**மயக்குநன்**

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுவதை பாஜக வரவேற்கிறது!- அண்ணாமலை.

டெல்லி குடியரசு தின விழாவில் கொண்டு செல்ல அனுமதிச்சா… பாஜகவையே வரவேற்பாங்க பாஸ்..!

**balebalu**

உருமாறிய சாலைகள் தம் பழைய அகலத்தை அடைகின்றன உருமாறிய வைரஸால்

-SundayLockdown

**amudu**

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்

கோ பேக் சொல்லியே பிரபலம் பண்ணிட்டாங்க போல.

**ரஹீம் கஸ்ஸாலி**

மரம், செடி இல்லாத வீட்டைக்கூட பார்த்திடலாம். மருந்து, மாத்திரை இல்லாத வீட்டை பார்ப்பதுதான் அபூர்வம்.

**balebalu**

ரயிலில் போனில் பாட்டு கேட்டால்.. சத்தமாக பேசினால்.. இரவு லைட் போட்டால் அபராதம்! அதிரடி உத்தரவு – செய்தி 

டாய்லெட் நாற்றம் தாங்காமல் மூக்கை மூடினால் அபராதம் உண்டா ஆபீசர் ?

**Memes Tamizha**

மீண்டும் மோடி பிரதமராக 72% மக்கள் ஆதரவு ஜீ கருத்துக்கணிப்பு

விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து ஒரு தடவை கூட எங்கள்ட யாரும் கருத்து கணிப்பு எடுத்தது மாதிரி தெரியல!

**amudu**

பாஜகவினர் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். -மோடி.

டெல்லியில் விவசாயிகளை நீங்க ஒரு வருடத்திற்கு மேலாக ஊக்குவித்தது போலங்களா.!?

**மயக்குநன்**

எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு சோதனைக்கு வரலாம்!- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

எல்லா முன்னேற்பாடுகளையும் செஞ்சு வச்சிட்டு காத்துக்கிட்டு இருக்கார் போல..?!

**PrabuG**

ரயிலில் போனில் சத்தமாக பாட்டு கேட்டால் அபராதம் – செய்தி.

வடக்கன்ஸ் ~

நானாவது டிக்கெட் எடுக்காம வரேன். பின்னாடி ஒருத்தன் பாட்டு கேட்டுகிட்டு உட்காந்திருக்கான் பாருங்க..

**உள்ளூராட்டக்காரன்**

இந்தியால தொட்டதுக்கெல்லாம் ஆதார் வேணும்

ஆனா அதோட சர்வர் எப்பவும் downல தான் இருக்கும்

நைஸ்ல?!

**மயக்குநன்**

ஜனவரி 30-ம் தேதி ஆண்டின் முதல் ‘மனதின் குரல்’ நிகழ்வு!- பிரதமர் மோடி அழைப்பு.

நிகழ்ச்சிக்கு முன்னால… ‘டெலிபிராம்ப்டர்’ ஒழுங்கா ஒர்க் பண்ணுதானு செக் பண்ணிப் பாத்துக்கோங்க ஜீ..!

**கோழியின் கிறுக்கல்**

“சளியோடு விளையாடி சளியோடு உறவாடி

சளியோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே” என்கிற நிலையில் தான் கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் உள்ளன!!

**-லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share