kகவர்னர் வேட்பாளர் ரஜினி: அப்டேட் குமாரு

entertainment

ரஜினியை முதல்ல வருங்கால முதல்வர்னு சொன்னாங்க. அப்புறம் இன்னொருத்தரை முதல்வராக்குவேன்னு ரஜினி சொன்னாரு. ஆனா அவரோட ரசிகர்களோ ரஜினிதான் முதல்வர் வேட்பாளர்னு சொன்னாங்க. இப்ப என்னடான்னா… இது சும்மா ட்ரைலர்தான் கண்ணா…மெயின் பிச்சர் வந்தா நீ தாங்கமாட்டேனு சொல்ற பஞ்ச டயலாக் மாதிரியே, இப்ப வாட்ஸ் அப்ல ட்ரையல் அறிக்கை விட்டிருக்காராம் ரஜினி.

இதையெல்லாம் பாத்துட்டு ஒரு அண்ணன் சொன்னதுதான் செம பஞ்ச். ‘ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லைங்க. அவர் ஒரு கவர்னர் வேட்பாளர். கவர்னர்னா யாரையும் பாக்க வேணாம்… எப்ப வேணும்னாலும் முடிவெடுக்கலாம், சில முடிவுகளை லேட்டா கூட எடுக்கலாம். யாரும் கேட்க மாட்டாங்க. அப்புறம் சொத்து வரி, வீட்டு வரியெல்லாம் கவர்னர்கிட்ட கேட்க மாட்டாங்க. அதனால ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லைங்க, கவர்னர் வேட்பாளர்’னு சொல்லிருக்காரு. உண்மையிலயே செம பஞ்ச்தான இது?

நீங்க அப்டேட் பாருங்க….

**நாகராஜ சோழன்MA.MLA**

”அறிக்கை என்னுடையது இல்லை, ஆனால் தகவல்கள் உண்மை”. ரஜினி

அய்யய்யோ மறுபடியும் மொதல்ல இருந்தா????

**Memes Tamizha**

அறிக்கை என்னுடையது அல்ல. ஆனால் அதில் உள்ள தகவல்கள் உண்மை – சிஸ்டம்

இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்து இருக்கலாம்!

**𝐇𝐚𝐫𝐢𝐭𝐡𝐫𝐚𝐧𝐚𝐝𝐡𝐢 𝐫𝐚𝐣𝐚™**

குரூப்ல டூப்பா இருந்தா அது..

‘அது இது எது’ ஷோ.

குரூப் பூரா டூப்பா இருந்தா அது..

‘பிக்பாஸ்’ ஷோ!

**மெத்த வீட்டான்**

சமூக வலைத்தளங்களில் பரவும் அறிக்கை என்னுடையது அல்ல ஆனால் அதில் இருக்கும் தகவல்கள் உண்மையானவை – ரஜினி #

மாப்பிள்ளை அவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது என்ற படையப்பா காமெடிதான் ஞாபகம் வருது !

**PrabuG**

அரசியல் நிலைப் பாட்டை விரைவில் அறிவிப்பேன் – தலைவர்.

ஆண்டியார் பாடுகிறார் : போதும் போதும் உன் பாட்டு புறப்படப் போறேன் நிப்பாட்டு…

**மயக்குநன்**

கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில், பொது முடக்க காலத்தையும் நாம் மறக்க கூடாது!- மோடி.

‘நடந்ததை’ எல்லாம் அவ்ளோ ஈசியா மறக்க முடியுமா தெய்வமே..?!

**சரவணன். ℳ**

சீனா, பாகிஸ்தானுடனான போர் தேதியை பிரதமர் மோடி குறித்துவிட்டார்- உ.பி. பாஜக தலைவர் ஸ்வந்திரா தேவ்சிங்.

மோடி ~ இவன் வேற, வாய மூடுறா கொரங்கு…

**தர்மஅடி தர்மலிங்கம்**

திருமணத்தில் உறவினர் போல் நடித்து மொய் பணத்தை திருடிச்சென்ற நபர்..போலீஸ் வலைவீச்சு-செய்தி!

படுபாவி.! மொய் வெச்ச காசுக்கே மொய் வெச்சுட்டு போய்ட்டானே ..

**மயக்குநன்**

முதல்வர் அடிக்கும் பந்துகள் எல்லாம் சிக்ஸர், எதிர்க்கட்சித் தலைவர் அடிக்கும் பந்துகள் நோ பால்!- அமைச்சர் செல்லூர் ராஜு.

மொத்தத்தில்… மக்கள் வாழ்க்கையை ‘விளையாட்டா’ ஆக்கிட்டீங்க..!

**சரவணன். ℳ**

மதுரையில் கட்டப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனமாம்.

அடேய் மொதல்ல எய்ம்ஸை கட்டுங்கடா. கல்யாணமே பண்ணலையாம், புள்ளைக்கு பேர் தேடறாங்களாம்…

**கோழியின் கிறுக்கல்!!**

YouTube பார்க்கும் பொழுது பக்காவாக வரும் Net connection,

ஏனோ Online வகுப்புகளின் பொழுது சரியாக வருவதில்லை!!

#மகனதிகாரம்

**-லாக் ஆப்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *