வீட்ல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு தம்பினு சொல்லிக்கிட்டே டீக்கடை வாசல்ல பஜ்ஜிய பிச்சுத் தின்னாரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டு மாதிரியே இருக்கிற அண்ணன். ஏண்ணே இப்படி சொல்றீங்கனு கேட்டேன். எல்லாத்துக்கும் எடப்பாடிதான் காரணம்… 9 ஆவது படிக்கிற பெரியவனுக்கு ஸ்கூல் உண்டாம்… 6 ஆவது படிக்கிற சின்னவனுக்கு ஸ்கூல் கிடையாதாம். ‘ஐ… எனக்கு ஸ்கூல் கெடையாது’னு சொல்லி சின்னவன் பெரியவனை கிண்டல் பண்றான். பெரியவனோ, ‘ஸ்கூலும் போகணும், இவன்கிட்ட ஏச்சும் வாங்கணுமா?’னு கண்டதையும் போட்டு உடைக்கிறான். இப்ப சொல்லுங்க வீட்ல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போறதுக்கு காரணம் யாரு?னு கேட்டாரு. நான் வாய்க்கு நவம்பர் 30 வரை ஊரடங்கு போட்டிருக்கிறதா சைகை காமிச்சுட்டு வந்துட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க…
**மயக்குநன்**
ஸ்டாலினின் முதல்வராகும் கனவை இந்த ‘வேல் யாத்திரை’ கலைத்துவிடும்!- எல்.முருகன்.
‘வடிவேல்’ மாதிரியே நகைச்சுவையா பேசறீங்க பாஸ்..!
**சரவணன். ℳ**
கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதி விதிமுறைகளை மீறியதாக அமையாது…!! தோ்தல் ஆணையம் அறிவிப்பு.
ஏன்னா சொன்னது அவங்க முதலாளியாச்சே…!
**ச ப் பா ணி**
திருமணமாகி பிரிந்த மணமக்களை கூட சேர்த்துவிடலாம்,
டீக்கடையில் பிரிந்த தினத்தந்தி பேப்பரை சேர்க்கவே முடியாது
**மயக்குநன்**
7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வைத்து மு.க.ஸ்டாலின் ‘அரசியல்’ செய்கிறார்!- முதல்வர் பழனிசாமி.
அப்புறம் என்ன ‘அவியலா’ செய்ய முடியும் தலைவரே..?!
**நாகராஜ சோழன் MA.MLA**
தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 50% இருக்கைகளுடன்
திரையரங்குகளை திறக்க அனுமதி.- செய்தி
கொரோனா ‘ படம் ‘ காட்டாம இருந்தா சரி தான்…
**எனக்கொரு டவுட்டு**
நாமே பக்கத்துல இல்லைன்னாலும் நம்மலயே நினைச்சுக்கிட்டு இருக்குற ஒரு உறவை சம்பாதிச்சிறனும்..
அதுக்கு நீ ஊர் பூரா கடன் வாங்கி வைக்கணும்…
**PrabuG**
என்னையாடா ஷாப்பிங் பண்ண போகக் கூடாதுன்னு சொன்னீங்கன்னு சின்னம்மா விட்ட சாபமோ என்னமோ,
பல பேர் இப்போ வெளியே போக முடியாம ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ணுறாங்க!!
**???????????????????????????????????????????????????? ????????????????**
தோனியும், தீபாவளியும் ஒண்ணு எல்லோரையும் சந்தோசப்படுத்த இக்கட்டான சூழ்நிலையில் இருக்காங்க.
**Siva_KS**
கவர்மெண்ட் இருந்தா தானே எல்லாரும் கவர்மெண்ட் வேலை கேட்கிறீங்க அதான் நம்ம ஜீ கவர்மெண்ட் சொத்தை எல்லாம் வித்துட்டு இருக்கார்.
கூடிய விரைவில் மத்திய அரசை ஐந்து வருட குத்தகைக்கு அம்பானிக்கு விற்கப்படும்
**லாக் ஆஃப்**�,”