பாதி மாஸ்க்கும் முழு ஊரடங்கும்: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

என்ன இரவு ஊரடங்குன்ற பேர்ல பாதி ஊரடங்கு போட்டுட்டாங்கனு அண்ணன் ஒருத்தர் கேட்டாரு. ஆமா முகத்தில் பாதிக்கு மட்டும் மாஸ்க் போட்டுக்கிட்டா அப்படிதான் பாதி ஊரடங்குல ஆரம்பிச்சு முழு ஊரடங்குல முடியும் னு தம்பி ஒருத்தரு தெளிவா விளக்கம் சொல்றாப்ல.

நீங்க அப்டேட் பாருங்க

**Kirachand**

முதல்வராகும் எண்ணமில்லை… ஆனால் தமிழகத்தை ஆள வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

“முடிசூடா மன்ன”னா இருக்கணும்னு நினைக்கிறாரோ?

**balebalu**

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் உடல் போலீஸ் ‘பாதுகாப்புடன்’ அடக்கம்

-முரண்

**PrabuG**

இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் – ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழக பாஜக ~

அண்ணே.. இவர் வேண்டாம். இவர் இந்த ஸ்டேட்டுக்கு வேண்டவே வேண்டாம்…

**ச ப் பா ணி**

ரீசார்ஜ் செய்யாத போது

“சிம் சொப்பனமாகி” விடுகிறது

**mohanram.ko**

கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றாரு, கட்டிட மேஸ்திரி

**டீ இன்னும் வரலை**

12 ராசிகளுக்கும் ஒரே ராசி பலன்

‘உழைச்சு தான் சாப்பிடனும்’…

**கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..**

உ.பி.யில் நீதான் ஆட்சி அமைப்பாய் என கனவில் வந்து கடவுள் சொன்னார்” – அகிலேஷ்

யப்பா.. நீ ஜெயிக்கறது கனவுல தான் நடக்கும்னு சொல்லிருக்காருப்பா..

**மயக்குநன்**

இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்!- ஆளுநர் ஆர்.என்.ரவி.

‘ரவி’ன்னா ‘சூரியன்’னு ஒரு அர்த்தம் உண்டே..?!

**வசந்த்**

பிரதமரின் மௌனம் பலமானது ~ ராகுல் காந்தி

அப்பாடா.. நா கூட காங்கிரஸ் பலமானதுனு சொல்லவாராரோன்னு பயந்துட்டேன்

**Sai Sudhar**

“மனசு வெள்ளை பாருங்க”ன்னு அழுகையுடன் சொல்கிறது உடைக்க பட்ட தேங்காய்!

**balebalu**

அப்புறம் என்னப்பா

மெடிக்கல் ஷாப்பை மளிகை கடையா மாத்திடலாமா

-Lockdown

**லாக் ஆஃப்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share