img src=”https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/image_arc/2022/03/02/26a.jpg” width=”100%” >
**சரவணன். ????**
வணிக சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு!
பின்ன, தேர்தல் தான் முடிஞ்சிடுச்சே ரிசல்ட் வர்ற வரைக்கும் காத்துக்கிட்டு இருப்பாங்களா?
**மயக்குநன்**
உலகின் பழமையான மொழியான தமிழானது இந்தியாவில் இருப்பது பெருமை!- பிரதமர் மோடி.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்சு ஒரு வாரமாச்சு ஜீ..!
**Erode Kathir**
கேள்விகளே இல்லாத இடங்களில் சொல்லப்படுகின்ற பதில்களுக்கு உளறல்கள் என்றும் பெயருண்டு!
**நாகராஜசோழன்.MA.MLA.**
ஈசியா ஃபேமஸ் ஆகனும்னா நெகடிவ் பப்ளிசிட்டி தான் ஷார்ட் கட்,
அதை ப்ளூ சட்டை மாறன் தெளிவா பண்றார் !
**balebalu**
காலை நேரத்தில் குழந்தைகளை எழுப்பி , குளிக்க , சாப்பிட வைத்து பள்ளிக்கு அனுப்புவதில் ஒவ்வொரு வீட்டிலும் மினி உக்ரைன் போர் தினமும் நடக்கிறது
**Mannar & company**
கழுத்துல ‘டை’ கட்டிகிட்டு ஸ்கூல் போக ஆரம்பிச்சு,
தலையில் ‘டை’ அடிச்சிகிட்டு வேலைக்கு போவதில் முடிகிறது வாழ்க்கை!
**balebalu**
சோஷியல் மீடியா வந்ததில் இருந்து இளைஞர்களுக்கு தினம் தினம் சிவராத்திரி தான்
**கடைநிலை ஊழியன்**
வணிக சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு – செய்தி #
ஜி மைண்டு வாய்ஸ் – என்ன இதுக்கே கதறுறானுங்க.. அடுத்த வாரம் பெட்ரோல் விலைய கூட்டுவேனே.. என்ன செய்ய போறானுங்களோ..
**PrabuG**
ஜெயக்குமார் கைது மூலம் அதிமுகவை அச்சுறுத்த முடியாது – தளவாய் சுந்தரம்.
எப்படி தல இவ்வளவு கான்ஃபிடனஸ்.
நாங்களாம் அம்மா கைதையே பாத்தவங்களாச்சே..
**ஹோம் வார்**
மனைவி – நீங்க எப்பவாச்சும் ரஷ்யா அல்லது உக்ரைன் போயிருக்கீங்களா..?
கணவன் – இல்ல..
மனைவி – உங்களுக்கு ரஷ்யா அல்லது உக்ரைன் ல பிசினஸ் பண்ற ஐடியா இருக்கா..?
கணவன் – இல்ல..
மனைவி – இனிமே அங்க போய் நாம வாழ போறமா..?
கணவன் – இல்ல..
மனைவி – அங்க நம்ம உறவினர்கள் யாராவது இருக்காங்களா..?
கணவன் – இல்ல..
மனைவி – அப்படீன்னா அந்த டிவி ரிமோட்டை எங்கிட்ட குடுங்க..!
**ச ப் பா ணி**
Time table வந்திடுச்சு. அப்ப ஆல் பாஸ் இல்லை.இனி புக் எடுத்து படிக்கனுமே
-ஆல்பாஸ் ஆனோர் சங்கம்..
**மயக்குநன்**
காங்கிரஸ் கட்சி, கண்டிப்பாக ஒரு நாள் தமிழகத்தில் ஆளும்கட்சியாக வரும்!- கே.எஸ்.அழகிரி.
அது… டைம் மெஷின்ல 70 வருஷம் பின்னோக்கி போனாதான் நடக்கும்..!
**கோழியின் கிறுக்கல்!!**
உபி தேர்தல் முடிந்த பின் தான் உக்ரைன் பிரச்சனை உயிர் பெறும் போல!?
**- லாக் ஆப்**