கொரோனாவுக்கு கோயில்: அப்டேட் குமாரு

entertainment

வர்ற சட்டமன்றத் தேர்தல் கூட்டணியில முக்கியப் பங்கு வகிக்கிறது கொரோனாதான். அதுமட்டும் வரலைன்னா, ரஜினி கட்சி ஆரம்பிச்சிருப்பாரு. ஒரு கூட்டணிய அமைச்சிருப்பாரு. அடுத்த கூட்டணியிலேர்ந்து நாலு கட்சிங்க அந்தக் கூட்டணிக்கு போயிருக்கும். ஆனால் இது எதுவுமே நடக்காம பாத்துக்கிட்ட பெருமை பூரா கொரோனாவையே சேரும். கொரோனாவுக்கு ஒரு கோயில் கட்டணும். கரசேவைக்கு நான் தயார்னு நம்ம திமுக தம்பி ஒருத்தர் இன்னிக்கு பூரா என்னை படுத்தியெடுத்துட்டாரு.

அவர் யோசிக்கிற ஆங்கிளும் ஒரு வகையில சரிதானே…கொரோனாவுக்கு சமாதி கட்டுறது ஒரு பக்கம்னா கொரோனாவுக்கு கோயில் கட்டுறதும் நடக்குது,

நீங்க அப்டேட் பாருங்க

    

*James Stanly*

எங்களுக்கும் Reservation வேணும்..

அதுக்கு ஏன்டா ட்ரெயின மறிச்ச..

அங்க Reservation இருக்குல்ல..

*சரவணன். ℳ*

தெலுங்கானாவின் ஆளும் கட்சியான டிஆர்எஸ் கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளில், ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை!- அமித்ஷா.

டேய்…இங்க பார்றா, சொன்னதை எல்லாம் செஞ்ச தலைவரு…

*உள்ளூராட்டக்காரன்*

என் உடல் மட்டும் தான் இங்கு உள்ளது…

உயிரும், உள்ளமும் உன்னிடம் தான் உள்ளன

உன் இதயத்தில் இட ஒதுக்கீடு பெறுவது எப்போது?!

*சரவணன். ℳ*

“முப்பது வருசத்துக்கு முன்னாடி கோலம் போட ஆரம்பிச்சவ இன்னும் போட்டுக்கிட்டு இருக்காய்யா…”

ரஜினி கட்சி அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம் இந்த வசனம் தான் நினைவுக்கு வருது…

*பர்வீன் யூனுஸ்*

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்குப் புத்துயிரூட்ட மோடி கடினமாக உழைக்கிறார் – அமித்ஷா # பறவைகளை நேசிக்க சொல்லியா..?

         

  

*நாகராஜ சோழன் MA.MLA*

நாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் .- அன்புமணி

ரயிலை கல்லால் அடிப்போம்,

பஸ் மேல ஏறி நிப்போம், பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுப்போம், மத்தபடி நாங்க வன்முறைக்கு எதிரானவர்கள் தான்…

*Arulraj*

அப்பனே முருகா

செந்தூர்வாழ் குமரா

இன்னைக்கு டிசம்பர் 1

வருசம் வருசம் டிசம்பர் மாதம் தான் பிரச்சினை வந்துப் போகும் ஆனா இந்த 2020 வருசம் பூராவும் டிசம்பர் மாதிரியே இருக்கு

இந்த டிசம்பர்லயாவது கொஞ்சம் பிரச்சினைக்கு டிஸ்க்கவுண்டு குடு முருகா

  

*ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 𝕣𝕒𝕛𝕒*

கூடிய விரைவில் முடிவாம் மாமா..

டெல்லி விவசாயிகளுக்கா மாப்ள..

இல்ல.. மாமா, தலைவர் கூடிய விரைவில் கட்சி தொடங்க முடிவு எடுக்கப்படும்னு முடிவு பண்ணிருக்காராம்..

  

*நெல்லை அண்ணாச்சி*

Covid vaccine பற்றி மக்களுக்கு

” புரியும்படி எளிய ” வார்த்தைகளில் ,

விஞ்ஞானிகள் சொல்ல வேண்டும்..மோடிஜி..

# அவருக்கும் புரியல ன்னு

எவ்வளவு சூசகமா சொல்லுறாரு…!!

 

  

*உள்ளூராட்டக்காரன்*

கண்ணடி பட்டாலும் கல்லடி படக்கூடாது

– நான் இரயில் பேசுகிறேன்

*கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?*

விரைவில் முடிவை அறிவுப்பேன் – ரசினி

# மறுபடியும்  முதல்ல இருந்தா..?

  

*மயக்குநன்*

இன்னும் கடுமையாக உழைத்தால்தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்!- ரஜினி.

‘அண்ணாத்த’க்கு அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியாச்சு போலிருக்கே..?!

*சரவணன். ℳ*

என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்!- ரஜினிகாந்த்.

தலைவரே, நீங்க கண்ணாடி முன் நின்னு பேசறீங்க…

*கோழியின் கிறுக்கல்!*

பாட்டி பேத்திக்கு பல்லாங்குழி விளையாடவும்,

பேத்தி பாட்டிக்கு கைப்பேசி இயக்கவும் கற்றுக் கொடுக்கும் கொரோனா காலங்கள் சில சமயம் இனிமையாகத் தான் தோன்றுகிறது!!

*-லாக் ஆஃப்*�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *